விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பரத்திலும் பரத்தைஆதி*  பௌவ நீர்அணைக்கிடந்து,* 
    உரத்திலும் ஒருத்திதன்னை*  வைத்துஉகந்து அதுஅன்றியும்,*
    நரத்திலும் பிறத்தி*  நாத ஞானமூர்த்தி ஆயினாய்,* 
    ஒருத்தரும் நினாதுதன்மை*  இன்னதுஎன்ன வல்லரே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நாத - ஸ்வாமிந்!
ஞானம் மூர்த்தி ஆயினாய் - ஜ்ஞாநஸ்வருபியானவனே!
பரத்திலும் பரத்தை ஆகி - பராத்பரனாயிராநின்றாய்.
ஒருத்தி தன்னை - ஒப்பற்ற பெரிய பிராட்டியாரை
உரத்தில் - திருமார்பிலே

விளக்க உரை

மேன்மை எல்லைகாண முடியாதாப்போலே நீர்மையும் எல்லைகாண வொண்ணாதபடி யிருக்குமாற்றை அநுபவித்து ஈடுபடுகிறார். க்ஷீரஸாகரசாயித்வமும் லக்ஷ்மீபதித்வமும் பராத்பரத்வப்ரகாசகமாதலால் “பரத்திலும் பரத்தையாதி” என்றதற்கு உபபாதகமாக அவ்விரண்டையும் அருளிச்செய்தார். பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியனத்திற்கு அரும்பதவுரை வரைந்த வொருவர்- “பரத்தையாதி யென்றது- ‘பரத்தையாகி’ என்று பாடமாக வேணுமென்று கண்டு கொள்வது” என்றெழுதிவைத்தது மறுக்கத்தக்கது. ஆதி என்பது ‘ஆ’ என்னும் வினைப்பகுதியடியாப் பிறந்த நிகழ்கால முன்னிலை யொருமை வினைமுற்று என்பதை அவர் அறிந்திலர். ஆதி= ஆகின்றாய் என்றபடி. பரத்தை = முன்னிலை; படர்க்கையில் பரத்தன் என்றாம். மேற்பட்ட வஸ்துக்களிலும் மேற்பட்ட வஸ்துவாக இராநின்றா யென்கை. நரத்திலும் பிறத்தி = ராமகிருஷ்ணாதிரூபேண மனுஷ்ய ஜாதியிலும் பிறக்கின்டறா யென்கை. நினாது = நினது என்றதன் நீட்டல்.

English Translation

You became the sentient O Lord, you lie on waterbed! You bear the lady-of-the-lotus on your manly chest always. You came in mortal form O Lord and showed the world the path of love. There’s no one who can speak about your qualities as “this and this”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்