விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தூ நிலாமுற்றத்தே*  போந்து விளையாட* 
  வான் நிலா அம்புலீ*  சந்திரா! வா என்று*
  நீ நிலா நிற் புகழாநின்ற*  ஆயர்தம்* 
  கோ நிலாவ கொட்டாய் சப்பாணி* 
  குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வான் - ஆகாசத்திலே
நிலா - விளங்குகின்ற
அம்புலி - அம்புலியே!
சந்திரா - சந்திரனே!
தூ - வெண்மையான

விளக்க உரை

நீ முற்றத்திலே நின்றுகொண்டு சப்பாணி கொட்ட வேணுமென்கிறாள். சந்திரனே! நான் விளையாடும்படி நீ சற்று இப்படி வருவாயாக என்று அழைத்துக்கொண்டே முற்றத்தில் நீ நின்றுகொண்டு நந்தகோபானு மனம் மகிழுமாறு சப்பாணி கொட்டு என்றவாறு. நின்புகழாநின்ற - உன் சேஷ்டைகளைக் கண்டு மனமகிழ்ந்து உன்னைக் கொண்டாடுகின்ற இடையர். ‘நிலா’ என்ற சொல் மூன்றனுள் முதலது - பெயர்ச்சொல்; இரண்டாவது - வினைத்தொகை; மூன்றாவது - ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம்; ‘நில்லா’ என்பதன் தொகுத்தல். நிலாவுதல் - விளங்குதல்

English Translation

Nandagopala stands watching proudly as you call the big moon roaming in the wide sky to come and play with you in the moonlit portico. Clap Chappani for him, O, Lord of Kudandai, clap Chappani.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்