விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    படைத்தபார் இடந்துஅளந்து*  அதுஉண்டுஉமிழ்ந்து பௌவநீர்,* 
    படைத்துஅடைத்து அதிற்கிடந்து*  முன்கடைந்த பெற்றியோய்,*
    மிடைத்த மாலி மாலிமான்*  விலங்கு காலன்ஊர் புக,* 
    படைக்கலம் விடுத்த*  பல் படைத் தடக்கை மாயனே!  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பௌவம் நீர் - (அண்டங்களுக்குக் காரணமான) ஏகார்ணவத்தை
படைத்து - ஸ்ருஷ்டித்து
படைத்த - (பிறகு, அண்டப்ரஹ்மஸ்ருஷ்டி பூர்வமாக) ஸ்ருஷ்டிக்கப்பட்ட
பார் - பூமியை
இடந்து - (ஸ்ரீவராஹமூர்த்தியாய் அண்டபித்தியில் நின்றும்) ஒட்டுவித்தெடுத்து

விளக்க உரை

“மாலிமான்” என்றதை ‘மான் மாலி’ என்று மாற்றி அந்வயித்து ஸுமாலியென்று பொருள்கொள்ளப்பட்டது. ‘ஸு’ என்பதன் ஸ்தாநத்தில் மான் என்றது மஹாந் என்பதன் விகாரம். அன்றி, ‘மாலியவான்’ என்பவனை ‘மாலி மான்’ எனக் கூறிக்கிடப்பதாகவுங் கொள்ளலாம். அங்ஙனுமன்றி, மாலி, மாலி, மான் விங்கு- மாலியென்ன, சுமாலியென்ன, மாரீச மாயாமிருகமென்ன இவர்கள் காலனூர்புக- என்று முரைக்கலாம். விலங்க என்றது மாலி சுமாலிகட்கு அடைமொழியானபோது, அதிக்ஷுத்ரர்களான என்று பொருள் கொள்க. இப்பாட்டில் வினைமுற்று இல்லையாகிலும் கீழ்ப்பாட்டோடேயாவது மேற்பாட்டோடேயாவது கூட்டிக் கொள்ளலாம்.

English Translation

You made the Earth; you lifted it, then ate and brought it out again. You made the ocean churned the ocean, lay on it, and made a bridge. You made the angry Mali and Sumali go to Hell below, O Lord with arms of strength and build that wield the mighty five weapons!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்