விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பண்டும் இன்றும் மேலுமாய்*  ஓர் பாலனாகி ஞாலமேழும்,* 
  உண்டுமண்டி ஆலிலைத்  துயின்ற*  ஆதி தேவனே,!*
  வண்டுகிண்டு தண் துழாய்*  அலங்கலாய்!. கலந்தசீர்,* 
  புண்டரீக பாவைசேரும்*  மார்ப!பூமி நாதனே!*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓய் பாலன் ஆகி - ஒப்பற்ற சிறு குழந்தையாய்
ஆலிலை துயின்ற - ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின
ஆதிதேவனே ! - மூல புருஷனே!
வண்டு - வண்டுகளானவை
கிண்டு - (மதுவுக்காக வந்து) குடையும்படியான

விளக்க உரை

எல்லா வுலகங்களையும் கொள்ளை கொள்ளவந்த ப்ரளய காலத்திலே வஸிஷ்ட சண்டாளவிபாகம் பாராமல் எல்லாரையும் திருவயிற்றிலே வைத்து நோக்கின உனக்கு ஆச்ரியதர்கள் விஷயத்திலே வாத்ஸல்யமுள்ளமை ஒரு வியப்போ? என்கிறார் இப்பாட்டில். அநாச்ரிதர்கள் என்று ஒருவரையும் விலக்காமல் ஆச்ரிதர்களோடு மையமாகவே அவர்களையும் வயிற்றிற் கொண்டவன் ஆச்ரித விஷயத்தில் காட்டும் பக்ஷபாதம் உண்மையில் வியப்பன்றே. எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் மூன்று காலங்களிலும் குறையற்ற தென்கிறார்- பண்டும் இன்றும் மேலும் என்று. பண்டும் என்றது ஸ்ருஷ்டிக்கு முற்காலத்திலே என்றபடி. இன்றும் என்றது- ஸ்ருஷ்டிகாலத்தைச் சொன்னபடி. மேலும் என்றது ப்ரளயகாலத்தைச் சொன்னபடி. ஸ்ருஷ்டிக்கு முற்காலத்தில் எம்பெருமானுடைய ரக்ஷகத்வம் எப்படிப்பட்ட தென்னில்; ஒன்று ஒன்றிலே லயிக்கிறதென்று சொல்லிக்கொண்டு வருமிடத்து இறுதியாக “துக்ஷ†*** என்று சொல்லியிருக்கையாலே தன் பக்கலிலே ஏறிட்டுக்கொண்டு நோக்கும்விதம் அறியத்தக்கது. ஸ்ருஷ்டி தசையில் எல்லா வுயிர்கட்கும் ஏககாலத்தில் கரண களே பரங்கள் கொடுத்தருளியதும், ப்ரளய தசையில் அனைத்தையும் வயிற்றிலே வைத்து நோக்கியதும் ரக்ஷணப்ரகாரஙக்ள்.

English Translation

O Past, Present and Future tense, O child who took the seven worlds, who swallowed all and fell asleep on fig leaf, O the Primal Lord! O Wearer-of-the-Tulasi-wreath with bumble bees that sip the sap! O Lord with lotus-lady on the chest, O Husband of Dame Earth!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்