விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அரங்கனே! .தரங்கநீர்*  கலங்க அன்று குன்றுசூழ்,* 
  மரங்கள் தேய மாநிலம் குலுங்க*  மாசுணம் சுலாய்,*
  நெருங்கநீ கடைந்தபோது*  நின்றசூரர் என்செய்தார்?* 
  குரங்கையாளுகந்த எந்தை!* . கூறுதேற வேறிதே.*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தரங்கம் நீர் கலங்க - அலைகளையுடைய ஸமுத்ரமானது கலங்கவும்
மா நிலம் குலங்க - பெரிய பூமியானது குலுங்கவும்
மாகணம் நெருங்க கலாய் - வாஸுகி யென்னும் நாகத்தை அழுந்தச் சுற்றி
நீ கடைந்த - (கடலை) நீ கடைந்தருளின காலத்திலே
நின்ற - அருகே நின்று கொண்டிருந்த

விளக்க உரை

இந்திரன் முதலிய தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மந்தர மலையைமத்தாக நாட்டி- வாஸுகிநாகத்தைக் கடைகயிறாகச் சுற்றிக்கடல் கடைந்தபோது தேவர்கள் அசுரர்கள் முதலியோர் தாங்கள் கயிற்றைவலித்துக் கடைவதாகக் கைவைத்து க்ஷணகாலத்திற்குள் இளைதபுதுப்போய் கைவாங்கினவாறே ‘நீங்கள் வெறுமனே இருங்கள்’ என்று அவர்களைச் சுகமாக உட்காரவைத்து விட்டு எம்பெருமான் தானே அஸஹாயனாய்க் கடைந்து தலைக்கட்டியிருக்கச் செய்தேயும் “தேவதைகள் கடல்கடைந்தார்கள்” என்று நாட்டார் தேவதைகளுக்கு விஜயப்புகழ்கூறுமாறு அவர்களை அபிமாகித்ததும், - அதிமாநுஷக்ருத்யங்களைச் செய்து இராவணனைத் தொலைத்ததெல்லாம் தன்னுடைய திவ்யசேஷ்டிதமாயிகச்ருக் செய்தேயும். ‘வாநர வீரர்கள் இலங்கையைப் பொடிபடுத்தினார்கள்’ என்று உலகத்தார் அவர்கள் தலையிலே விஜயப்புகழை ஏறிட்டுகூறுமாறு அவர்களை அபிமாகித்ததும்- என்ன ஆசரித பக்ஷபாதம்! என்று விஸ்மப்படுகிறார்கள். கடல் கடைந்தவிதம் மிகவும் பயங்கரமாயிருந்தது என்கைக்காக, “தரங்க நீர் கலங்க, குன்றுசூழ் மரங்கள் தேய, மாநிலம் குலுங்கக் கடைந்தபோது” என்கிறார். ஸர்ப்பஜாதிக்கு வாசகமாகிய மாசுணம் என்றசொல் இங்கு வாஸுகி யென்று சிறப்புப் பொருளைத் தந்தது. கலாய் = சுலாவி என்றபடி: சுலாவுதல்- சுற்றுதல். இப்படி நீ கடைந்த காலத்திலே, “நாங்கள் பராக்ரமசாலிகள்” என்று செருக்கி மார்புதட்டிக் கிடப்பவர்களான தேவர்கள் “கடலில் நின்றும் அமுதம் கிளர்ந்து வருவது எப்போதோ!” என்று தாங்கள் உணவு பெறுங்காலத்தை எதிர்பார்த்து அக்கடலையே நோக்கிக் கொண்டிருந்தது தவிர ஸமுத்ரமதந காரியத்துக்கு உறுப்பாக ஒரு காரியமும் செய்யவில்லை; செய்ததுண்டாகில் பிரானே! நீயே சொல்லிக்காண்; மந்தரமலைக்கு அதிஷ்டநமா யிருந்தார்களா? வாஸுகிக்கு நல்லசக்தியுண்டாம்படி வரமளித்தார்களா? அல்லது கடை கயிற்றைத்தான் சற்றுப்பிடித்து வலித்தார்களா? என்னதான் செய்தார்கள்? அவர்கள் செய்தது ஒன்றுமில்லை.

English Translation

O, Ranga Lord pray tell me how the ocean-deep was churned about, with Vasuki the snake around the mountain Meru Mandaram. The ocean turned and all the Earth was shaking, breaking trees around. O Monkey-Lord, the brave that stood were watching you without a role!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்