விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புள்ளாதாகி வேதநான்கும்*  ஓதினாய் அதன்றியும்,* 
    புள்ளின் வாய்பிளந்து*  புட்கொடிப்பிடித்த பின்னரும்,*
    புள்ளையூர்தி யாதலால*  அதென்கொல் மின்கொள் நேமியாய்,!* 
    புள்ளின் மெய்ப்பகைக்கடல் கிடத்தல்*  காதலித்ததே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின்கொள்  நேதமியாய் - தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே!
புள் அது ஆகி - ஹம்ஸரூபியாய் அவதரித்து
வேதம் நான்கும் - நான்கு வேதங்களையும்
ஓதினாய் - உபதேசித்தருளினாய்,
அது அன்றியும் - அதுவுமல்லாமல்,

விளக்க உரை

“புட்கொடிப் பிடித்த பின்னரும்” என்று இப்போதைய பாடமிருந்தாலும் “புட்கோடிப் பிடித்தி பின்னரும்” என்றே ப்ராசீகமும் சுத்தமுமான பாடமென்று அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்யக்கேட்டிருக்கை. ஊர்தி என்றது போலவே பிடித்தி என்றதும் ‘பிடிக்கின்றாய்’ என்ற பொருளுடைய முன்னிலையொருமை நிகழ்கால வினைமுற்று. ஆகவே, “புள்ளதாகி வேத நான்குமோதினாய்,அதன்றியும் புள்ளின்வாய் பிளந்து புட்கொடிபிடித்தி, பின்னரும் புள்ளையூர்தி” என்றிங்ஙனே மூன்று வாந்யார்த்தமாகக் கொள்ளுதல் சிறக்குமென்க. பின்னரும் என்னது- அன்றியும் (***) என்றபடி ஆதலால் என்றது- இப்படியெல்லாம் செய்திருக்கச் செய்தேயும் என்றபடி- அர்த்தஸ்வாரஸ்யத்துக்கான சப்தத்தை செருக்குவது உசிதமேயாமென்க. இப்படி பஹுமுகமாக ரக்ஷகத்வத்தை வெளிப்படுத்திக்கொண்டு ரக்ஷணைக தீக்ஷிதனாய் எழுந்தருளியிருக்கச் செய்தேயும் திருப்பாற்கடலிலேவந்து குளிரிலே கிடப்பதேன்? என்று *** பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் இப்பாட்டின் அந்வயக்ரமம் சிறிது மாறுபட்டிருப்பினும் ஸுகு மாரமதிகளின் ஸௌகரியத்துக்காக இங்ஙனே யாம் உரைத்தோமென்றுணர்க. கீழும் மேலும் இங்ஙனே யாமெழுது மிடங்களில் இதுவே ஸமாதாகமென்று கொள்க. கடல் புள்ளிள் பகை மெய் கிடத்தல் காதலித்தது என்கொல்?- என்று மாற்றி அந்வயித்துக்கொள்க. நித்யஸுரிகளில் தலைவராயும் எம்பெருமானுக்கு அந்தரங்க கிங்கரர்களாயுமுள்ள பெரிய திருவடி திருவநந்தாழ்வான்களுக்கு உண்மையில் பகைமையென்ன ப்ரஸக்திதானுமில்லையேயாகிலும் கருடஜாதிக்கும் ஸர்ப்பஜாதிக்கும் உலகவியற்கையிலே பகைமை காணப்படுவதுபற்றி “புள்ளின்பகை” என்று அருளிச் செய்தார். வியாக்கியானத்திலும்- “ஸாயாமர்ய த்ருஷ்டியால் பார்த்தால் திருவடிக்கு ஸஹஜத்ருவென்னலாயிருக்கிற திருவனந்தாழ்வான்மேலே” என்று அருளிச்செய்துள்ளமை காண்க.

English Translation

You become the Hamsa bird and gave the world the Vedas-four, you did kill the demon bird, then you did hold a banner bird. You did drive a Garuda bird and you do lie on foe-to-bird, but why the love to lie alone in ocean-deep, O Discus-Lord?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்