விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உலகுதன்னை நீபடைத்தி*  உள்ஒடுக்கி வைத்தி,*  மீண்டு- 
    உலகு தன்னுளே பிறத்தி*  ஓரிடத்தை அல்லையால்*
    உலகு நின்னொடு ஒன்றிநிற்க*  வேறுநிற்றி ஆதலால்,* 
    உலகில்நின்னை உள்ளசூழல்*  யாவர் உள்ள வல்லரே?*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகில் - லோகத்திலே
குழல் உள்ள நின்னை - ஆச்சரியமான படிகளையுடைய உன்னை
யாவலர் உள்ள வல்லவர் - அறியவல்லாரார்?
மீண்டு - அதுமன்றியில்
உலகு தன்னே - இவ்வுலகத்தினுள்ளே

விளக்க உரை

ஜகத்காரணபூதனாய்நின்று நோக்குமளவே யன்றிக்கே அஸாதாரண விக்ரஹத் தோடுங் குடிவந்தவதரித்து நோக்குகின்ற உன்படிகளை அறியவல்லார் ஆருமில்லை யென்கிறார். நான்காமடியை, சூழல் உள்ள நின்னை உலகில் யாவருள்ளவல்லர்” என மாற்றி அந்வயித்துக்கொள்க. ஆச்சர்யமான படிகளையுடைய உன்னை லௌகிக புருஷர்களில் அறியவல்லார் ஆருமில்லை யென்க. இனி, நின்னை என்பதற்கு ‘உன்னிடத்திலே’ என்று பொருள்கொண்டு உன்னிடத்திலே உள்ள சூழலை ஆர் அறியவல்லார்? என்னவுமாம். படைத்தி-, வைத்தி, பிறத்தி, நிற்றி= இவை முன்னிலை யொருமை வினை முற்றுக்கள்.

English Translation

You created all the worlds, then you did swallow all the worlds. Then you did permeate the worlds without a place of exception. Now all the worlds are borne in you, yet you remain aloof of them. The way you hold the worlds around, who can contemplate this all?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்