விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சொல்லினால் தொடர்ச்சிநீ*  சொலப்படும் பொருளும்நீ,* 
  சொல்லினால் சொலப்படாது*  தோன்றுகின்ற சோதிநீ,*
  சொல்லினால் படைக்க*  நீ படைக்கவந்து தோன்றினார்,* 
  சொல்லினால் சுருங்க*  நின் குணங்கள் சொல்ல வல்லரே?    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

படைக்க - (உலகங்களை) உண்டாக்குவதற்காக
சொல்லினால் - சப்தங்களைக் கொண்டு
சுருங்க - சுருக்கமாவாவது
நின் குணங்கள் - உனது கல்யாண குணங்களை
சொல்லவல்லரே. - வர்ணிக்க சக்தர்களோ? (அல்லர்.)

விளக்க உரை

ப்ரஹ்ருத்ராதிகள் ஆச்ரயணீரல்லர்களென்றும் எம்பெருமானொருவனே ஆச்ரயணீயனென்றும் சொல்லிவிடலாமோ? வேதங்களில் இத்யாதிகளான சில வாக்கியங்கள் சிலபாரம்யத்தையும் - இத்யாதிகளான சில வாக்யங்கள் ப்ரஜாபதி பாரம்யத்தையும் சொல்லிக்கிடக்கின்றனவே; அவர்கள்- ஆச்ரயணீயராகத் தடையென்ன? என்று சிலர்க்கு சங்கையுண்டாக அந்த ப்ரஜாபதி பசுபதிகள் எம்பெருமானுக்குப் புத்ரபௌத்தர்களான வேதங்கள் முறையிடா நிற்பதுந் தவிர, அவர்கள் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை விரிவாகப் பேசமாட்டாமையன்றிக்கே சுருக்கமாகவும் பேசமுடியாதவர்களென்று ப்ரமாண ப்ரஸித்தமாயிருக்க, இப்படி ஸ்ருஜ்யர்களாகவும் அஜ்ஞர்களாயுமுள்ள அவர்கள் ஆச்ரயணீயராகைக்கு ப்ரஸக்தியேயில்லை யென்றாயிற்று.

English Translation

The sweet delight of Vedic chants, the substance of the Vedas too; the radiance beyond the word are all thy manifestations. The great creator, lotus-born, --the four-head faced Brahma too, can hardly speak a word or two in praise of all thy glory-ways.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்