விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தன்னுளே திரைத்துஎழும்*  தரங்க வெண் தடங்கடல்* 
  தன்னுளே திரைத்துஎழுந்து*  அடங்குகின்ற தன்மைபோல்,*
  நின்னுளே பிறந்துஇறந்து*  நிற்பவும் திரிபவும்,* 
  நின்னுளே அடங்குகின்ற*  நீர்மை நின்கண் நின்றதே,* (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தன்னுள்ளே திரைத்து - தன்னிலே கிளர்ந்து
எழும் - பரவுகின்ற
தரங்கம் - அலைகளையுடைத்தாய்
வெண்தடம் - வெளுத்த ப்ரதேசங்களையுடைத்தான
கடல் - கடலானது

விளக்க உரை

‘ஜகத்துக்கு எது உபாதாநகாரண்மோ அதுதான் உபாஸ்யம்’ என்பது அந்த ச்ருதிவாக்யத்தின் பொருள். அப்படி உபாதாக காரணத்வ ப்ரயுக்தமான ஆச்ரயணியத்துவமும் எம்பெருமானிடத்தே யுள்ளது என்கிறது இப்பாட்டு. அலையெறிவு ஓய்ந்துகிடந்த கடலானது வாயுஸஞ்சாரத்தாலே எங்கும் அலையெறியப்பெற்று, மீண்டும் காற்று ஓய்ந்தவாறே அவ்வலையெறிவு அடங்கி, கடலானது சாந்தமாவதுபோல- என்பது முன்னடிகளின் கருத்து. பின்னாடிகளிற் கூறப்படும் அம்சத்திற்கு இது த்ருஷ்டாந்தம். தார்ஷ்டாந்திகத்தில் வாயுவின் ஸ்தானத்திலோ பகவத் ஸங்கல்பத்தைக்கொள்க. ஸங்கல்பமில்லாதபோது பகவத்ஸ்வரூபம் சாந்தமாயிருக்கும். ***- என்றாற்போன்ற ஸங்கல்பம் உண்டானவாறே ஸ்தாவர ஜங்கமாத்மகமான ப்ரபஞ்சங்கள் தோன்றுதலும் பின்பு அழிதலுமான அவஸ்தைகளையடைந்து கடைசியாக ***- என்றபடி எம்பெருமானளவிலே உயஸம்ஹ்ருதங்களாய்ப் போகிறபடியை சொல்லுகிறது. நிற்பவும் திரிபவும்- நிற்பனவும் திரிபனவு மென்றபடி.

English Translation

The tide that rises in the deep amid the foam and lasting waves is tide that subsides in the deep amid the foam and lasting waves. The standing and the moving ones are born and live and die in you, the way you keep them all within your corpus, o The Only God!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்