விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பூநிலாய ஐந்துமாய்*  புனற்கண்நின்ற நான்குமாய்,* 
  தீநிலாய மூன்றுமாய்*  சிறந்த கால்இரண்டுமாய்,* 
  மீநிலாயது ஒன்றும்ஆகி*  வேறுவேறு தன்மையாய்,* 
  நீநிலாய வண்ணம்நின்னை*  யார்நினைக்க வல்லரே?* (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மீ  நிலாயது ஒன்றும் ஆகி - ஆகாசத்திலே உள்ள சப்தகுணமொன்றுக்கும் நிர்வாஹகனாய்
வேறு வேறு தன்மை ஆய் - பரஸ்பரம் விலக்ஷணமான தேவகி பதார்த்தங்களக்கும் ஆத்மாவாய்
நீ நிலாய வண்ணம் - நீ நிற்கிற படியையும்
நின்னை - உன்னையும்
ஆர் நினைக்க வல்லர் - ஸ்வப்ரயத்நத்தினால் யார் தான் சிந்தித்தறியக் கடவர்?

விளக்க உரை

அண்டங்களுக்குக் காரணமாய் குணங்களோடு கூடிய நிலம் நீர் தீ கால் விசும்பெனும் ஐம்பூதங்கட்கு அந்தராத்மாவாய் நிற்கிற நீயே உபாதாந காரணம்; இப்பரமார்த்தமானது வேதாந்தப்ரமேயம் கைப்படாத பாஹ்ய குத்ருஷ்டிகளுக்கு நெஞ்சில்புக வழியில்லையென்கிறது, இப்பாட்டு, இது எம்பெருமானை முன்னிலையாக்கிச் சொல்லும் பாரசுமாயிருத்தலால் விளி வருவித்துக் கொள்ளப்பட்டது. இப்பாட்டின் முன் இரண்டரையடிகளால் பிராக்ருதஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது, ஸாதாரனமாய் ப்ருதிவிக்கு மனம் குணமென்றும், அப்புக்கு ரஸம்குணமெனறும், தேஜஸ்ஸுக்கு ரூபம் குணமென்றும், வாயுவுக்கு ஸ்பர்சம் குணமென்றும், ஆகாசத்திற்கு சப்தம் குணமென்றும் இங்ஙனே ஒவ்வொரு பூதத்திற்கு ஒவ்வொன்று குணமாகச் சொல்லப்பட்டிருந்தாலும், ‘காரணவஸ்துவிலுள்ள குணங்கள் காரியத்தில் வந்து சேருகின்றன’ என்ற நியாயப்படி பூமிக்கு ஐந்து குணங்களும், ஜலத்திற்கு நான்கு குணங்களும், தேஜஸ்ஸுக்கு மூன்று குணங்களும், வாயுவுக்கு இரண்டு குணங்களும் உண்டு. கைத்திரீயோப நிஷத்தில்- “ஆகாசாத்வாயு; வாயோரக்நி; அக்நேராப: அத்ப்ய: ப்ருதீவீ,” என்று ஆகாசத்தில் நின்றும் வாயுவும், வாயுவில் நின்றும், அக்நியும், அக்நியில் நின்றும் ஜலமும், ஜலத்தில் நின்றும் ப்ருதிவியும் உண்டாவதாக ஓதப்பட்டிருக்கின்றது. ஆகாசத்தில் நின்றும் பிறக்கிற வாயுவானது தன் குணமாகிய ஸ்பர்சத்தோடுகூட ஸ்வகாரணமான ஆகாசத்தின் குணமாகிய சப்தத்தையும் உடைத்தானதாம். வாயுவின் நின்றும் பிறக்கிற அக்நியானது தன்குணமாகிய ரூபத்தோடு கூட ஸ்வகாரணமான வாயு வினிடத்துள்ள சப்தஸ்பர்சங்களையும் உடைத்தானதாம். அக்நியில் நின்றும் பிறக்கிற ஜலமானது தன்குணமாகிய ரஸத்தோடுகூட ஸ்வகாரணாமன அக்நியிடத்துள்ள சப்தஸ்பர்சரூபங்களையும் உடைத்தானதாம். ஜலத்தில் நின்றும் பிறக்கிறபூமியானது தன் குணமாகிய கந்தத்தோடுகூட ஸ்வகாரணமாக ஜலத்திலுள்ள சப்தஸ்பர்ரூபரஸங்களையும் உடைத்ததானதாம். ஆகவே, பூமியானது ஐந்து குணங்களை உடைத்தானதாகவும், ஜலமானது நான்கு குணங்களை உடையதாகவும், அக்நியானது மூன்று குணங்களையுடையதாகவும்,வாயுவானது இரண்டு குணங்களையுடையதாகவும், ஆகாசமானது ஒரு குணத்தை உடையதாகவும் ஆயிற்று. இந்த ப்ரக்ரியையைத் திருவுள்ளம் பற்றியே “பூநிலாயவைந்தும்” இத்யாதிகள் அருளிச்செய்யப்பட்டனவென்க.

English Translation

The five Gunas of dainty Earth, the four Gunas of waters all, the three Gunas in holy fire, the two Gunas in air around, the one Guna in space above are all the manifestations. The way you stand apart from all, who can fathom thee, O Lord?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்