விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப*  மருங்கின் மேல்* 
  ஆணிப் பொன்னாற் செய்த*  ஆய்பொன் உடை மணி* 
  பேணி பவளவாய்*  முத்துஇலங்க*  பண்டு- 
  காணி கொண்ட கைகளால் சப்பாணி* 
  கருங்குழற் குட்டனே! சப்பாணி. (2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆணிப்பொன்னால் செய்த - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய் - (வேலைப்பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி - பொன்மணிக் கோவையை
உடை - உடைய
மருங்கின்மேல் - இடுப்பின் மேலே

விளக்க உரை

சிவந்த மாணிக்கக் கல் பொருத்திய கிண்கிணி இனிய ஒலி எழுப்ப இடுப்பின் மேல்சிறந்த பொன்னால் ஆன அரைஞான் கயிற்றில் ஆய்ந்து எடுத்த பொன்மணிகள் அணிந்தவனே பவளம் போல் சிவந்த வாயில் முத்தொத்த பற்கள் விளங்க, முன்பு (மாவலியிடமிருந்து)நிலத்தை இரந்து பெற்ற கைகளால் சப்பாணி கொட்டேன்! கரிய குழல்களைக் கொண்ட பிள்ளையே சப்பாணி கொட்டு!!

English Translation

O, dark dressed One, wearing a beautiful waistband of gold, and jeweled ankle-bells that chime, flashing a pearly smile over charming coral lips! With hands that took the Earth as gift from Mahabali, clap Chappani, come clap you hands, Chappani.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்