விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று*  வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*
  கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்*  கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி*
  சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்*  தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
  தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்*  திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வலி வணக்கு - (எதிரிகளுடைய) வலிமையைத் தோற்பிக்கின்ற;
வரை நெடு தோள் - மலை போன்ற பெரிய தோள்களையுடைய;
விராதை - விராதனென்னும் இராக்ஷஸனை;
வரி வில் வாங்கி - கட்டமைந்த வில்லை பெற்று;
வண் தமிழ் மா முனி கொடுத்த - சிறந்த தமிழ்ப பாஷைக்கு உரியவரான அகஸ்திய முனிவர் கொடுத்த;

விளக்க உரை

உரை:1

இராமபிரான் பரசுராமனிடமிருந்து விஷ்ணுதநுஸ்ஸைப் பெற்று அவனை வென்றபோது அங்குவந்து தன்னைக் கொண்டாடிய தேவர்களுள் வருணனிடத்திலே அவ்வில்லை கொடுத்து அதனை நன்றாகப் பாதுகாத்து வைத்திருந்து உரிய ஸமயத்தில் தன்னிடம் கொணர்ந்து கொடுக்குமாறு சொல்ல அங்ஙனமே அதனை வாங்கிச்சென்று நன்கு பாதுகாத்து வைத்திருந்த வருணன் பின்பு ஸ்ரீராமன் வநவாஸம்புக்குத் தண்டகாரணியத்தில் அகஸ்தியாச்ரமத்திற்கு எழுந்தருளினபொழுது அதனை அம்பறாத்தூணியுடனும் வாளுடனும் அம்முனிவர் தர பெருமாள் பெற்றுக் கொண்டனன் என்பது இங்கு அறியத்தக்கது. சூர்ப்பணகையை அங்கபங்கஞ் செய்தது இளைய பெருமாளின் செய்கையாயினும் அதனைப் பெருமாள் மேல் ஏற்றிச் சொன்னது, இராமனது கருத்துக்கு ஏற்ப அவன் கட்டளையிட்டபடி இவன் செய்தனனாதலின் ப்ரயோஜ்ய கர்த்தாவின் வினையாதல்பற்றி யென்க. அன்றியும் என்றபடி இராமபிரானுக்கு லக்ஷ்மணன் வலத்திருக்கை யெனப்படுதலால் அங்ஙனம் கையாகிற லக்ஷ்மணனுடைய செயலை இராமன்மேல் ஒற்றுமை நயம்பற்றி ஏற்றிச் சொல்லுதல் தகுதியே. சூர்ப்பணகை ராமலக்ஷ்மணர்களிடம் வரும்போது அழகிய வடிவமெடுத்து வந்தனளாதலால் கலைவணக்கு நோக்கரக்கி என்றார். மானின் விழிபெற்ற மயில் வந்ததெனவந்தாள் என்றார் கம்பரும். இங்கே மூக்கு என்றது- மற்றும் அறுபட்ட அவயவங்களுக்கும் உபலக்ஷணம்.

உரை:2

விராதனைக் கொன்று தமிழ்முனிவன் தந்த வில்லை வாங்கிக் கொண்டு சூர்ப்பனகை மூக்கை அறுத்து கரதூஷணர்களையும் கொன்று மானைத் துரத்திச் சென்றவன்.

English Translation

Wielding his strong bow, he killed the strong-armed monster Viradha and received the bow given to him by the Tamil Muni Agastya; he cut off the nose of the sensuous demoness Surpanaka, slew Khara and Dushana, and the golden deer. Those who offer him worship, with bowed heads and folded hands in Tillainagar Tiruchitrakutam sanctify the Earth space by trading the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்