விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்*  பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர* 
    கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்*  கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக* 
    நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே*   நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ* 
    ஏலும் மறைப்பொருளே! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய்! ஆடுக ஆடுகவே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மறை - வேதத்தினுடைய
ஏலும் - தகுதியான
பொருளே - அர்த்தமானவனே!
பாலொடு - பாலோடேகூட
நெய் - நெய்யும்

விளக்க உரை

உரை:1

கண்ணபிரான் நெய் பால் தயிர் முதலியவற்றைப் பலகாலும் அமுது செய்வதாலும், சந்தனம் செண்பகம் முதலியவற்றைப் பலகாலும் திருமேனியிலே சாத்திக்கொள்வதனாலும் செங்கீரையாடும்போது அவைகள் நல்ல பரிமளம் கமழ நிற்கும். அப்படிச் செங்கீரையாடுகையில் வாயைத்திறந்து சிறிது சிரிக்கும்போது “கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்” என்றபடி இயற்கையாகவே தாமரைப்பூ பச்சைக் கற்பூரங்களின் நறுமணமுடைய திருப்பவளத்தின் பரிமளமும் வீசும்; வாயினுள்ளே வௌவியரும்புகள் போன்ற சிலபற்கள் பிரகாசிக்கும்; திருமார்விலணிந்த ஆபரணங்களின்மேல் வாயிலூறுகிற அம்ருதஜலம் இற்றிற்றுவிழும். இப்படிப்பட்ட நிலைமைகளுடனே செங்கீரையாடவேணு மென்றதாயிற்று.

உரை:2

வேதநாயகனே! நீ உண்ட பால், தயிர், நெய் கலந்த அன்னம் எல்லாம் அவற்றின் நறுமணத்தை உன் தேகத்தின் மேல் விட்டுவிட்டு வயிற்றினுள் சென்றன. அந்த நறுமணம் எங்கும் பரவி வர.நீலமணிவண்ணத் தேகத்துக்கு எடுப்பாக அமைந்த, குழைவாய் அரைத்து உன் மேனியில் பூசிய சந்தனம் கமகமக்க, மணக்கும் செண்பகமலரும், மாதவனைப் பார்த்து சிரிக்கும் செந்தாமரை மலரும், நல்ல மணத்துடன், மருத்துவக்குணமும் நிறைந்த பச்சைக் கற்பூரமும் உன் மேனியில் ஒய்யாரமாய் படர்ந்து மணம் வீச.வடிவான, இனிய மணங்கமழும் உன் செம்பவள வாயினுள்ளே, அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம், வெள்ளி முளைத்ததைப் போன்று அமைந்த பால்பற்கள் கண்ணைப் பறிக்க.நீலமணிவண்ணனே! நீ சிரிக்கும் பொழுது சிந்தும் உன் வாயமுதத்தில் நனைந்து முக்தி பெற்ற ஐம்படைத்தாலியின் நடுவே உன் முகம் பூத்திருக்க... காக்கும் கடவுளுக்கே காப்பா. வேதங்களுக்குள் பொருந்திய பொருளானவனே! ஏழுலகும் ஆள்பவனே செங்கீரை ஆடுவாயாக!

English Translation

With the smell of milk, curds and Ghee, mixing with the fragrance of Sandal paste, Comphor, Senpakam, and lotus flowers, a mouth lined by thin coral lips displaying a few tender teeth, set on a dark face lined by a string of charms, O Lord, dance! Dance the Senkirai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்