விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தம் இல் மருவி*  உன்னொடு தங்கள் கருத்து ஆயின செய்து வரும்* 
    கன்னியரும் மகிழ கண்டவர் கண்குளிர*  கற்றவர் தெற்றிவர பெற்ற எனக்கு அருளி* 
    மன்னு குறுங்குடியாய்! வெள்ளறையாய்! மதில் சூழ்-  சோலைமலைக்கு அரசே! கண்ணபுரத்து அமுதே!* 
    என் அவலம் களைவாய்! ஆடுக செங்கீரை*  ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மன்னு - (ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக்கடவ
குறுங்குடியாய் - திருக்குறுங்குடியிலே எழுந்தருளியிருக்குமவனே!
வெள்ளறையாய் - திருவெள்ளறையிலே வர்த்திக்குமவனே!
மதிள் சூழ் - மதிலாலே சூழப்பட்ட
சோலை மலைக்கு - திருமாலிருஞ்சோலை மலைக்கு

விளக்க உரை

உரை:1

பிரானே! நீ எப்படி செங்கீரையாட வேணுமென்றால் உன்னை இடுப்பிலெடுத்துக்கொண்டு தங்கள் தங்கள் வீட்டுக்குச் சென்று தங்களிஷ்டப்படி உன்னை யனுபவித்துவருகின்ற இளம்பெண்களும் மனமகிழும்படி ஆடவேணும்; ஸாமாந்யமாகப் பார்க்கிறவர்கள் எல்லாருடையவும் கண்கள் குளிரும்படி ஆடவேணும்; கவிதொடுக்கக் கற்றவர்கள் பிள்ளைக்கவிகள் பாடிக்கொண்டு வரும்படி ஆடவேணும். அர்ச்சாவதாரமாக ஆங்காங்குக் கோயில்களில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீமந் நாராயணனே கண்ணபிரானாக அவதரித்தனனென்பதை மூன்றாமடியில் வெளியிடுகின்றனரென்க. திவ்யதேசங்களில் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு குணம் விளங்கும்; திருமாலிருஞ்சோலையில் ராஜாதிராஜனாயிருக்கும் தன்மை விளங்குதல் பற்றி “சோலைமலைக்கு அரசே” என்றார்; திருக்கண்ணபுரத்தில் பரமயோக்யனாயிருக்குந் தன்மை விளக்குதல்பற்றி “கண்ணபுரத்து அமுதே” என்றார். ‘அபலம்’ என்னும் வடசொல் அவலமெனத் திரிந்தது.

உரை:2

உன்னோடு தங்கள் கருத்தாயின செய்து வரும் கன்னியரும் மகிழக் - அவங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளை உன்னோடு விளையாடியும், உனக்குத் தேவையானவற்றை உனக்கு அளித்து, உன்னை மகிழ்ச்சியாய் விளையாடச் செய்து மகிழ்வித்து, மகிழ்ந்தனர்.சிறுபிள்ளைகளுடன் கண்ணன் சிரித்து விளையாடுவதையும், தன் மழலை மொழியால் கொஞ்சுவதையும் கண்டவர்கள் கண் குளிரப் பெற்றனர்; கற்றவர்களோ, மிகுந்த மகிழ்ச்சியால் வார்த்தைகளை மறந்து மெய்சிலிர்த்து நின்றனர்; அத்தகைய ஒரு பேரானந்த களிப்பை, என் அப்பனே உன்னைப் பெற்ற எனக்கு அருள்வாயாக!திருக்குறுங்குடி வாமனா! திருவெள்ளறையின் செந்தாமரைக்கண்ணா! திருமாலிருஞ்சோலை அழகா! திருக்கண்ணபுரத்தமுதா! என் துயரம் களையமாட்டாயா? என்னிடத்தே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக! ஏழுலகினுக்கும் இறைவா! ஒரே ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே!

 

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்