விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ*  அம்புயத் தடங் கண்ணினன் தாலோ* 
  வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ*  வேழப் போதகம் அன்னவன் தாலோ* 
  ஏல வார் குழல் என்மகன் தாலோ*  என்று என்று உன்னை என் வாயிடை நிறையத்* 
  தால் ஒலித்திடும் திருவினை இல்லாத்*  தாயரிற் கடை ஆயின தாயே (2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வேலை நீர் நிறத்து அன்னவன் - கடலின் நிறம்போன்ற நிறத்தையுடையவனே;
 
வேழம் போதகம் அன்னவள் - யானைக்குட்டி போன்றவனே;
ஏலம் வார் குழல் - பரிமளம் மிக்கு நீண்ட திருக்குழலையுடை;
என்று என்று - இப்படி பலகாலுஞ்சொல்லி;
என்வாயிடை நிறைய - என்வாய் திருப்தியடையும்படி;

 

விளக்க உரை

பன்னிரெண்டு மாதம் உன்னை வயிற்றிற் சுமந்து பெற்ற நான் உடனே திருவாய்ப்படிக்குப் போக்கிவிட்டேனாதலால், உன்னைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல் முதலிய ஆநந்தா நுபவங்களை யசோதை பெற்றாளேயன்றி நான் பெறாதொழிந்தேன், பாவியே னிழந்தேன் பிள்ளையைப் பெற்று ஆநந்தாநுபவம் பண்ணப்பெறாத துரத்ருஷ்டாலிநிகாளான தாய்மாரில் அந்தோ! நான் கடைகெட்ட தாயாகிவிட்டேனே! என்று தேவகி தன் வயிற்றெரிச்சலைக் கண்ணப்பிரானை நோக்கிக் கூறுகின்றன ளென்க. “ஆலை நீள் கரும்பன்னவன் “ என்று தொடங்கி “ ஏலவார் குழலென்மகன்” என்றளவு முள்ள ஐந்து விளிகளும் அண்மை விளி. குழந்தையைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டும் போது தாய்மார் முதலியோர் பாராட்டிச்சொல்லும் பாசுரம் இவை. ஆலையிலிட்டு ஆடத்தகுந்த கரும்பு என்றது - நன்றாக முற்றி ரஸம் நிரம்பிய கரும்பு என்றவாறு; அதுபோன்றவனே! என்றது - “??????? “ என்று உபநிஷத்தில் ஓதியுள்ளபடி - இன்சுவையே உருவெடுத்து வந்தாற்போலுள்ளவனே! என்றபடி : தாலோ - தால் - நாக்கு குழந்தைகளை உறங்கப் பண்ணுவதற்காகப் பெண்கள் நாவை அசைத்துச் சொல்லும் சொலவு.

English Translation

“Sleep, Little child, sweet as sugarcane, Talelo! Sleep, O Lord of lotus-like eyes, Talelo! Sleep, O Lord of ocean-hue, Talelo! Sleep, my baby-elephant, Talelo! Sleep my child with long fragrant hair, Talelo!”: Alas, I am not fortunate to sing your lullaby thus. Indeed I am the lowliest of lowly mothers.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்