விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மற் பொரு தோள் உடை வாசுதேவா*  வல்வினையேன் துயில் கொண்டவாறே*
    இற்றை இரவிடை ஏமத்து என்னை*  இன்னணைமேல் இட்டு அகன்று நீ போய்*
    அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்*  அரிவையரோடும் அணைந்து வந்தாய்* 
    எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய்?*  எம்பெருமான் நீ எழுந்தருளே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மல் பொரு தோள் உடை வாசுதேவா - மல்லரோடு போர் செய்த தோள்களையுடைய, கண்ணபிரானே;
வல்வினையேன் - மஹாபாவியான நான்;
துயில் கொண்டவாறே - தூங்குவதற்கு ஆரம்பித்தவுடனே;
இற்றை இரவு இடை ஏமத்து - அன்றிரவு நடுச்சாமத்திலே;
இன் அணைமேல் - இனிய படுக்கையிலே;
 

விளக்க உரை

வேறொரு பெண்மணியின் பேச்சு இது. மல்லர்களோடு யுத்தஞ் செய்யக் கற்றாயேயன்றி என்னோடு ச்ருங்கார ரஸாநுபவம் பண்ணக் கற்றிலைகாண்! என்ற உபாலம்பம் தோன்ற ” மற்றொரு தோளுடை வாசுதேவா!” என விளிக்கின்றனள். வல்வினையேன் - நீ என்னை ஒருத்தியையே விரும்பி மற்றையோரைக் கண்ணெடுத்துப் பாராமலிருப்பதற் குறுப்பான பாக்கியமற்ற நான், என்பது கருத்து. இரண்டாமடியில், ” இற்றையிரவிடை ” என்றே பாடம் நிகழினும் ” அற்றை யிரவிடை ” என்ற பாடமே வியாக்கியானத்திற்கும் பொருட் சேர்த்திக்கும் தகும் என்பர் பெரியோர்.

English Translation

O Lord Vasudev, with arms that took on the wrestlers! The moment this sinful self fell asleep, you slipped away in the middle of the night, leaving me alone on the settee. That night and all of the next day you spent embracing girls. Why have you come to hold my waist now? My dear Sir, would you please see your way out and leave?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்