விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காய மலர்நிறவா! கருமுகில் போல் உருவா!*  கானக மா மடுவிற் காளியன் உச்சியிலே* 
  தூய நடம் பயிலும் சுந்தர என்சிறுவா!*  துங்க மதக்கரியின் கொம்பு பறித்தவனே!* 
  ஆயம் அறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை*  அந்தரம் இன்றி அழித்து ஆடிய தாளிணையாய்!* 
  ஆய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காயமலர் - காயாம்பூப் போன்ற
நிறவா - நிறத்தையுடையவனே!
கருமுகில் போல் - காளமேகம் போன்ற
உருவா - ரூபத்தையுடையவனே
கானகம் - காட்டில்

விளக்க உரை

உரை:1

காளியனுச்சியில் நடம்பயின்றதும் மதக்கரியின் கொம்பு பறித்ததும் மல்லர்களை அழித்ததும் செங்கீரையாடும் பருவத்திற்கு வெகுநாள் கழித்தபின் நடந்த செய்திகள் ஆகையாலே இந்தச் செய்திகளை யெடுத்துச் சொல்லி யசோதைப் பிராட்டி “ஆடுக செங்கீரை” என்று பிரார்த்தித் திருக்கமாட்டாளே; “அன்னநடை மடவாளசோதை யுகந்தபரிசு ஆனபுகழ்ப் புதுவைப் பட்டனுரைத்த தமிழ்” என்கிற இவ்வாழ்வார் அந்தச் செயல்களையும் கூட்டிக்கொண்டு எப்படி அருளிச்செய்கிறாரென்று சிலர் சங்கிப்பர்; கேண்மின்; இவ்வாழ்வார் எம்பெருமானருளாலே மயர்வற மதிகலமருளப் பெற்றவராகையாலே இவர்க்கு அப்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுண சேஷ்டிதங்களெல்லாம் ஒருசேர ப்ரகாசிப்பதனாலே எதிர்காலத்தில் நடக்கும் செய்கைகளையும் மற்றை அவதாரங்களின் செய்கைகளையும் பரத்வம் முதலியவற்றின் தன்மைகளையும் அர்ச்சாவதாரங்களில் தோன்றுகிற குணசேஷ்டிகளையும் சேர்த்துக் கூறுகின்றாரென்றுணர்க. இந்த ஸமாதானம் இப்பாட்டுக்கு மாத்திரமல்ல; கீழும் மேலுமுள்ள பல பாட்டுக்களுக்குமாம். மூன்றாமடியில் ஆயம் - வேலைத்திறம். அந்தரமின்றி என்பதற்கு - மல்ல யுத்தம் செய்யும்போது ஓருடலுக்கும் மற்றோருடலுக்கும் இடைவெளியில்லாமல் நெருங்கிப் பொருது என்றும் உனக்கொரு அபாயமின்றிப் பொருது என்றும் உரைக்கலாம். “காயாமலர்” என்பது காயமலரென்று குறுக்க விகாரம் பெற்றது.

உரை:2

அடர்நீல வண்ணமுடைய காசா மலர் வண்ண தேகங்கொண்டவனே! குளிர் மழை பொழிகின்ற, கடல் நீருண்டு கருவுற்ற கருமேகங்களைப் போல் கண்ணுக்கும், மனத்தினுக்கும் குளிர்ச்சித் தரத்தக்க உருவங்கொண்டவனே!பிருந்தாவனத்திற்கருகில் இருந்த கானகத்தில் இருந்த பெரிய மடுவில் வசித்து வந்த கொடிய விடத்தைக் கக்கி அங்கிருந்த பூமியையும், பூங்காற்றையும், தேன்புனலையும் தீதாக்கிக் கொண்டிருந்த காளிங்கன் என்னும் கருநாகத்தினை அடக்கி, அதன் தலைகள் மீதேறி நன்னடனம் புரிகின்ற அழகனே என் மைந்தனே! அரச குலத்தவரையும், அவர்களுக்கொப்பானவர்களையும் மட்டுமே ஏந்திச் செல்லக்கூடிய பெருமையுடைய பட்டத்து யானையை, - மதுராபுரியின் பட்டத்து யானையான குவலயாபீடத்தின் கொம்புகளை சீறிப் பாய்ந்து பறித்தவனே!கம்சனிடமிருந்து பெறக்கூடிய ஆதாயத்திற்காக, கம்சனுக்கு ஆதரவாக கண்ணபெருமானிடமும் பலராமரிடமும் மல்யுத்தம் புரிய வந்தவர்களை எல்லாம் சிறிதும், பதற்றப்படாமல் பரபரப்பில்லாமல் அவர்களை அழித்தாடிய வலிமைமிகுந்த, அதேசமயம் மலரினும் மெல்லிய, செவ்விய திருவடிகளைக் கொண்டவனே! நல்லவர்களுக்குக் குளிர் மழையாகவும், அல்லவர்களுக்குக் கொடும்புயலாகவும் தோன்றவல்லவனே, என்றும் வெற்றித்திருநடனம் புரிபவனே! எனக்கு ஒருமுறை செங்கீரை ஆடுவாயாக! வலிமை மிகுந்த காளையைப் போன்றவனே எனக்காக ஒருபொழுது, செங்கீரை ஆடுக ஆடுகவே!

English Translation

O, Dark Kaya-hued Lord, resembling a dark cloud! O, My beautiful child, you danced in ecstacy on the serpent Kaliya’s head in the deep forest glen, with your pure feet. You plucked the tusk from the great elephant Kuvalayapida. Without a match you killed the fierce wrestlers in contest. O, My Lord, dance! Dance the Senkirai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்