விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆனாத செல்வத்து*  அரம்பையர்கள் தற் சூழ*
  வான் ஆளும் செல்வமும்*  மண்-அரசும் யான் வேண்டேன்*
  தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கடச் சுனையில்*
  மீனாய்ப் பிறக்கும்*  விதி உடையேன் ஆவேனே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆனாத  செல் வத்து - அழியாத (யௌவநமாகிய) ஸம்பத்தையுடைய;
அரம்பையர்கள் -  அப்ஸரஸ் ஸ்த்ரீகள்;
தன் சூழ  - தன்னைச் சூழ்ந்து நிற்க;
வான் ஆளும் செல்வமும் - மேலுலகத்தை அரசாளுகின்ற ஐச்வர்யத்தையும்;
மண் அரசும் - இப்பூலோகத்தை அரசாளும் ஆட்சியையு;

விளக்க உரை

உரை:1

இந்திரன் முதலிய தேவாதி தேவர்களின் பதவிகளும் இவ்வுலகத்து அரசாட்சியுமாகிய இரண்டு ஒருங்கு கிடைத்தாலும் வேண்டா என்று விலக்குகின்றார். அரம்பையர்கள் - ரம்பை முதலியோர். இரண்டாமடியிலுள்ள சொற்போக்கினால், இவை எனக்கு ஏககாலத்திலே கிடைத்தாலும் வேண்டா வென்பதும், இவற்றை யான் வேண்டாமைக்குக் காரணம் இவை கிடையாமையன்று, இவற்றில் எனக்கு விருப்பமில்லாமையே என்பதும் தோன்றும். முக்தியின் ம்ஹாநந்தத்தை நோக்குங்கால், இவ்விரண்டும் சிற்றின்பமேயாதலும், சாச்வதமான அந்தஸ்தாநத்தை நோக்குங்கள் இவை அழிவுள்ளனவேயாதலும், ஆத்மாவைக்கரும பந்தங்களினின்று விடுவிக்கின்ற அவ்வீட்டு நிலை போலவன்றி இவை பந்தங்களை உறுதிப்படுத்துதலில் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போலத் தம்முள் ஒப்பனவே யாதலும் கருதத்தக்கன. தேன் ஆர் - வண்டுகள் ஆரவாரிக்கின்ற என்றுமாம். சுனை - மலையில் நீரூற்றுள்ள குணம்.

உரை:2

அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.

English Translation

I do not cherish this life of wealth, glory and power, surrounded by dancing-girls decked in gold and finery. In the cool glens of Venkatam where flowers spill nectar, may I be born as a little fish!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்