விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எத் திறத்திலும்*  யாரொடும் கூடும்*  அச்
    சித்தந்தன்னைத்*  தவிர்த்தனன் செங்கண் மால்*
    அத்தனே*  அரங்கா என்று அழைக்கின்றேன்*
    பித்தனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் கண்மால் - புண்டரீகாக்ஷனான எம்பெருமான்;
எத்திறத்திலும் - எந்த விஷயத்திலும் ;
யாரொடும் - கண்ட பேர்களோடே;
கூடும் அச்சித்தம் தன்னை - சேர்ந்து கெட்டுப்போவதற்கு உறுப்பான நெஞ்சை;
தவிர்த்தனன் - நீக்கியருளினான்; (ஆதலால்);

விளக்க உரை

ஆழ்வீர்! அயலாரோடு பொருந்தாமைக்கடியான நன்மை உமக்கு வந்தபடிஏன்?’ என்று சிலர் கேட்க; இது நானே ஸம்பாதித்துக் கொண்டதல்ல; ஸர்வேச்வரனது அருளடியாகக் கிடைத்ததென்கிறார். ‘ஒரு அவைஷ்ணவனோடு பேசினால் ஸகல புருஷார்த்தங்களும் கொள்ளைகொள்ளையாகக் கிடைக்கும்’ என்று ஒரு ஆப்தன் சொன்னபோதிலும் அப்போதும் அவர்களை த்ருணமாகக் கருதி, ஸ்ரீரங்கநாதா! ஸ்ரீரங்கநாதா!’ என்றே எப்போதும் வாய்வெருவிக் கொண்டிருக்குமாறு எம்பெருமான் எனக்கு அருள்புரிந்த பாக்கியம் மற்றையோர்க்குக் கிடைக்குமா என்கிறார். எம்பெருமான் என்னை ஒருதடவை குளிரக் கடாக்ஷித்த மாத்திரத்திலே இந்த பாக்கியம் வாய்த்தது என்பார் “செங்கண்மால்.” என்கிறார்.

English Translation

The Lord weaned me away from mixing with just anyone for just anything. “My Mater!”, “My Aranga!”, I call, mad for the love of my own sweet Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்