விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வானவர்தாம் மகிழ வன் சகடம் உருள*  வஞ்ச முலைப்பேயின் நஞ்சம் அது உண்டவனே!* 
    கானக வல் விளவின் காய் உதிரக் கருதிக்*  கன்று அது கொண்டு எறியும் கருநிற என்கன்றே!* 
    தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்*  என்பவர் தாம் மடியச் செரு அதிரச் செல்லும்* 
    ஆனை! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வானவர் தாம் - தேவர்கள்
மகிழ - மகிழும்படியாகவும்
வல் சகடம் - வலியுள்ள சகடாஸுரன்
உருள - உருண்டு உருமாய்ந்து போம்படியாகவும்
வஞ்சம் - வஞ்சனையை உடையளான

விளக்க உரை

உரை:1

நஞ்சமதுண்டவனே “என்றும் பாடமுண்டு; முலையில் தடவிக்கிடந்த அந்தக் கொடிய விஷத்தை உண்டவனே! என்று பொருளாம். (கானகமித்யாதி). ) விளாமரமாய் நின்ற ஒரஸு ( கபித்தாஸுர)ன் மீது கன்றாயிருந்த ஒரஸுர ((வத்ஸாஸுர)னை விட்டெறிந்து இரண்டையும் சேர முடித்தருளினான் என்க. கன்றே! இளமையைச் சொன்னபடி; உவப்பினால் உயர்திணை அஃறிணையாயிற்று; தினைவழுவமைதி. - தேனுகன் - கழுதையான வடிவைக் கொண்டு காட்டுக்குள்ளே கண்ணனை நலிவதாக வந்தவன். கண்ணபிரான் பலராமனோடும் ஆயர் சிறுவர்களோடும் மாடுமேய்த்துக் கொண்டு பழங்கள் அழகாக மிகுதியாய்ப் பழுத்து வாசனை வீசிக் கொண்டிருந்த ஒரு பனங்காட்டையடைந்து அப்பனம்பழங்களை விரும்பி உதிர்த்துக்கொண்டு வருகையில் அவ்வனத்துக்குள் தலைவனும் கம்ஸன் பரிவாரத்தில் ஒருவனுமாகிய கழுதை வடிவங் கொண்ட தேனுகாசுரன் கோப­மூண்டு ஓடிவந்து எதிர்த்துப் போர்செய்ய, உடனே கண்ணன் அதிலாவகமாய்ப் பின்னங்கால் இரண்டையும் பற்றி அவ்வசுரக்கழுதையைச் சுழற்றி உயிரிழக்கும்படி பனைமரத்தின் மேலெறிந்து அழித்தனனென்பதாம். முரனையும் நிரகனையும் மடிவித்த விவரம்-: எம்பெருமான் வராஹாவதாரம் செய்து பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்த பொழுது எம்பெருமானுடைய ஸ்பர்சத்தால் பூமிதேவிக்குக் குமாரனாய்ப் பிறந்தவனும் அஸமயத்தில் சேர்ந்து பெறப்பட்டதனால் அஸுரத்தன்மை பூண்டவனுமான நரகனென்பவன் ப்ராக்ஜோதிஷமென்னும் பட்டணத்திலிருந்து கொண்டு ஸகல ப்ராணிகளையும் நலிந்து தேவஸித்த கந்தர்வாதிகளுடைய கன்னிகைகளையும் ராஜாக்களுடைய கன்னிகைகளையும் பற்பலரைப் பலாத்காரமாய் அபஹரித்துக் கொண்டுபோய்த் தான் மணம்புணர்வதாகக் கருதித் தன்மாளிகையிற் சிறை வைத்து வருணனது குடையையும் மந்தாகிரிசிகரமான ரத்நபர்வதத்தையும் தேவர்தாயான அதிதிதேவியின் குண்டலங்களையும் கவர்ந்துபோனதுமன்றி இந்திரனுடைய ஐராவத யானையையும் அடித்துக் கொண்டுபோகச் சமயம் பார்த்திருக்க, அஞ்சிவந்து பணிந்து முறையிட்ட இந்திரனது வேண்டுகோளால் கண்ணபிரான் கருடனை வரவழைத்து பூமிதேவியின் அம்சமான ஸத்யபாமையுடனே தான் கருடன்மேலேறி அந்நகரத்தையடைந்து சக்ராயுதத்தை ப்ரயோகித்து அவன் மந்திரியான முரன் முதலிய பல அஸுரர்களையும் இறுதியில் அந்த நரகாஸுரனையும் அறுத்துத்தள்ளி அழித்து, அவன் பல திசைகளிலிருந்து கொண்டுவந்து சிறைப்படுத்தியிருந்த பதினாறாயிரத்தொரு கன்னிகைகளையும் த்வாரகையிற் கொண்டு சேர்த்து மணஞ்செய்து கொண்டனனென்பதாம். ஆனை - முற்றுவமை; அண்மைவிளி.

உரை:2

விண்ணுலக தேவர்கள் மகிழும் வண்ணம், தீய எண்ணம் கொண்டு சக்கரவடிவில் வந்த சகடாசுரனை தூள் தூளாக நொறுங்கிப் போகும் வண்ணம் உன் பிஞ்சுக் கால்களால் உதைத்தழித்தாய்; வஞ்சக எண்ணம் கொண்டு உனக்குத் தாயமுது கொடுப்பது போல் நஞ்சமுது கொடுக்கத் துணிந்த பூதனை என்னும் அரக்கியின் உயிரைக் குடித்தவனே! காட்டிலிருந்த, வலிமையான விளா மரத்தின் காய்கள் உதிரக் கல்லெறிவது போல்,பசுங் கன்றின் உருவில் உருமாறி வந்த வத்சாசுரன் என்னும் அசுரனை மரத்தில் எறிந்து கொன்ற மைவண்ண தேகங்கொண்ட என் இளங்கன்றே! தேனுகாசுரன், நரகாசுரனின் அண்ணனான, ஐந்து தலைகளைக் கொண்ட முராசுரன் மற்றும் வலிமையும் துணிவும் மிகுந்த சினமெனும் செந்தீயைத் தன்னிடத்தே கொண்ட நரகாசுரன் மற்றும் பல அசுரர்களை எல்லாம் அவர்களுக்கு மரணபயத்தைத் தந்து நடுக்கங்கொள்ளச் செய்து, அழிக்கவல்ல வலிமை மிக்க ஆண் யானை போன்றவனே! ஆயர்கள் போரேறே எனக்காக ஒருமுறை செங்கீரை ஆடுக ஆடுகவே.

 

English Translation

The gods rejoiced when you smote the cart Sakatasura and drained life out of the deceitful ogress Putana. O, dark hued calf of mine! All the hard wood-apples in the deep forest fell when you threw the disguised calf Vatsasura against the Asura tree, then killed the notorious Dhenuka, Mura and Narakasura in battles that shook the Earth. O, My elephant,

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்