விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்*  முன் இராமனாய்* 
    மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்*  சொல்லிப் பாடி*  வண் பொன்னிப் பேர்- 
    ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு* அரங்கன் கோயில்-திருமுற்றம்* 
    சேறு செய் தொண்டர் சேவடிச்* செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏறு அடர்த்ததும் - (நப்பின்னைக்காக) ஏழு ரிஷபங்களை வலியடக்கியதும்;
ஏனம் ஆய் நிலம் கிண்டதும் - வராஹரூபியாய் பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்ததும்;
முன் இராமன் ஆய் - முன்பு சக்ரவர்த்தி திருமகனாய்ப் பிறந்து;
மாறு அடர்த்ததும் - சத்ரு ராக்ஷஸர்களைக் கிழங்கெடுத்ததும்;
மண் அளந்ததும் - (த்ரிவிக்ரமனாய்) உலகளந்ததும் (ஆகிய இந்த சரிதங்களை);

விளக்க உரை

எம்பெருமானுடைய பல அவதார சரித்திரங்களையே அநவரதம் வாயாரப் பாடிக்கொண்டு அன்பு மிகுதியால் கண்களின்று பெரிய நதிபோலப் பரவசமாகப் பெருகுகின்ற ஆநந்த புஷ்பங்களாலே ஸ்ரீரங்கநாதன் ஸந்நிதித் திருமுற்றத்தைச் சேறாக்குகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களின் திருவடிகளால் தொகையுண்ட சேற்றை எனது தலைக்கு அலங்காரமாகக் கொள்வேன் என்கிறார். கண்ணநீர் எவ்வளவு அடக்கினாலும நில்லாமல் பெருவெள்ளமிடுதற்குப் பொருத்தமான த்ருஷ்டாந்தம் காவிரியேயாம். கணடநீர் ஸ்ரீ (கண் அ) அ-ஆறாம் வேற்றுமை யுருபு கண்களினுடைய நீர் என்றபடி.

English Translation

Singing songs, “The-Lord-who subdued-seven-bulls!”, “The-Lord-who-lifted-the-Earth-as-a-boar!”, “The-Lord-who-came-as-Rama-to-kill-Ravana!”, “The-Lord-who-measured-the-Earth!”, and such, devotees shed tears gushing like the Kaveri river, slushing the inner courtyard of the Arangam temple. Thus slush from their feet is a perfect Tilaka paste to apply on my forehead.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்