விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நம்முடை நாயகனே! நான்மறையின் பொருளே!*  நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்- 
  தம்மனை ஆனவனே! தரணி தலமுழுதும்*  தாரகையின் உலகும் தடவி அதன் புறமும்* 
  விம்ம வளர்ந்தவனே! வேழமும் ஏழ் விடையும்*  விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!* 
  அம்ம! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை*  ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நம்முடை - எங்களுக்கு
நாயகனே - நாதனானவனே!
நால் மறையின் - நாலுவேதங்களுடைய
பொருளே - பொருளாயிருப்பவனே!
நாபியுள் - திருநாபியில் முளைத்திராநின்ற

விளக்க உரை

உரை:1

கர்மகாண்டம் என்றும் ப்ரஹ்மகாண்டம் என்றும் பகுக்கப்பட்டுள்ள வேதராசியில் முந்தின பகுதியில் பலப்பல கருமங்கள் மாத்திரமே சொல்லப்பட்டு பரப்ரஹ்மஸ்வரூபம் சிறிதும் சொல்லப்படாதிருந்தாலும் வைதிக கருமங்கள் யாவும் எம்பெருமானையே ஆராதிப்பனவாதலால் அப்படிப்பட்ட கருமங்களைச் சொல்லுகிற பூர்வகாண்டமும் பரம்பரையாய்ப் பரப்ரஹ்ம ப்ரதிபாதநத்திலேயே முடிவடைகின்றன வென்பது ஆன்றோர்களின் ஸித்தாந்தமாதலால் நான்மறையின் பொருளே! என்றார். மதுகைடபர்கள் நான்முகனிடத்திலிருந்து வேதங்களைப் பறித்துக்கொண்டு போனபோது அப்பிரமன் வேதங்களை யிழந்ததற்காக ‘கண்ணிழந்தேன் பொருளிழந்தேன்’ என்று கதறிக்கதறியழ அவ்வேதங்களை எம்பெருமான் மீட்டுக்கொணர்ந்து கொடுத்துத் துயர்தீர்த்ததனால் “நான்முகனுக் கொருகால் தம்மனையானவனே!” என்றார்.

உரை:2

எங்கள் ஆயர் குலத்தரசே! முழுமுதற் கடவுளே! வேதங்கள் நான்கின் மெய்ப்பொருளாய் இருப்பவனே! நின் கொப்பூழ்க்கொடி பந்தம் கொண்ட பிரம்மனிடமிருந்து அசுரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட வேதங்களை மீட்டுத் தந்து, நான்முகனுக்கு நற்றாயாக இருப்பவனே! மண்ணை ஓரடியாலும், விண்ணுலகம் முழுதையும் இரண்டாமடியாலும் அளந்துவிடும் அளவுக்கு வளர்ந்த வாமனனே! மதங்கொண்ட யானையானாலும், கூரிய கொம்புகளைக் கொண்ட காளைகளானாலும் அவற்றையெல்லாம் எளிதில் எதிர்கொண்டு, அடக்கி, என்றும் வெற்றிவாகை சூடுபவனே! என் கூற்றுக்கு செவிசாய்ப்பாயாக அண்ணலே! எனக்காக ஒரு முறை, ஒரே ஒரு முறை செங்கீரை ஆடிக்காட்டுவாயாக; ஆயர்கள் குலத்துதித்த போர் செய்ய வல்ல காளையைப் போன்ற வலிமையுடையவனே எனக்காக ஒரு முறை செங்கீரை ஆடுக ஆடுகவே.

 

English Translation

O, Lord, you are the substance of the four Vedas; help for the four-faced Brahma seated on your lotus navel when he was in distress by Madhu-Kaitabha! You grew as Trivikrama to encompass the whole Earth, the Milky Way and beyond. When confronted by the elephant Kuvalayapida and the seven bulls in a contest for Nappinnai you emerged victorious! O, Lord, dance! Dance the Senkirai.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்