விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாய் ஓர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*  வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
    வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*  மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்*
    காயாம்பூ மலர்ப் பிறங்கல் அன்ன மாலை*  கடி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
    மாயோனை மணத்தூணே பற்றி நின்று*  என் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே! 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கடி அரங்கத்து - நறுமணம்மிக்க கோயிலிலே;
ஓர் ஈர் ஐ நூறு வாய் - ஓராயிரம் வாய்களிலே;
துதங்கள் ஆர்ந்த - ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய்;
வளை உடம்பின் - வெளுத்த உடம்பை யுடையவனாய்;
அழல் - (எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழாநிற்பவனான;

விளக்க உரை

ஆயிரம் வாய்களாலும் ஆயிர நாமங்களைச சொல்லி எம்பெருமானைத் துதிப்பவனும், ‘சுத்த ஸத்வகுணமுடையவன்’ என்பது நன்கு விளங்குமாறு பால்போல வெளுத்த உடலையுடையவனுமான ஆதிசேஷன், எம்பெருமானிடத்திலுள்ள பரிவின் மிகுதியாலே அஸ்நாதத்திலும் பயத்தை மங்கிப்பவனாதலால் கொடிய அரக்கரசுரர்கள் விபவாவதாரங்களிற் போல அர்ச்சையிலும் வந்து நலிவர்களோ என்னும் அதினங்கையினால் அவர்கள் அணுகமுடியாதபடி எப்போதும் அழலை வாயில் நின்று கக்கிக்கொண்டிருப்பதனால் செந்நிறமான அந்த அக்நிஜ்வாலையானது அவனுடைய தலைகளின் மேற் கிளம்பி விசேஷமாகப் பரவி ‘சண்பகம் முதலிய செம்மலர்களாலே ஒரு மேற்கட்டி அமைக்கப்பட்டுள்ளதோ’ என்று உத்பரேக்ஷிக்கத் தக்கதாய் விளங்க, அத்தகைய மேற்கட்டியின் கீழே அரவணையின் மீது பள்ளி கொண்டருளா நின்ற பெரியபெருமாளை ஸேவித்தமாத்திரத்திலேயே “காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” என்றபடி சைதில்யம பிறந்து தரித்து நிற்கமுடியாத அவஸ்தை விளையுங்கால் அவ்வழகிய மணவாளனுடைய திருக்கண்ணோக்கத்திலே நிலாவுகின்ற இரண்டு திருமணத்தூண்களை அவலம்பமாகப் பற்றிக்கொண்டு தரித்துநின்று, வெகுநாளாக இழந்த இழவுதீர ஸ்தோத்ரம் பண்ணும்படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார். (மணத்தூணே பற்றிநின்று) அழகிய மணவாளன் ஸந்நிதியில் ஹத்தண்மையிலிருக்கும் இரண்டு தூண்களுக்குத் “திருமணத்தூண்” என்பது ஸம்ப்ராதாயத் திருநாமம். மணம். “மணத்தூணருகில் நின்றுகொண்டு” என்னாமல் “பற்றி நின்று” என்றதன் உட்கருத்தை ஸ்ரீரங்கராஜஸ்த்தில் படடர் வெளியிட்டருளினார்.

English Translation

In the fortified city of Arangam, the wonder-Lord reclines on a coiled serpent-bed looking like a dense bouquet of dark Kaya flowers. The hoods of the serpent curve over the adorable Lord’s unfading-flower-like head. Its thousand matchless lips full of eternal praise spit fire that spreads out everywhere like a canopy over the Lord. O, when will that day be when I stand by the auspicious twin Marattun pillars outside the sanctum and sing mouthfuls of praise!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்