விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொருத்தம் உடைய நம்பியைப்*  புறம்போல் உள்ளும் கரியானைக்* 
    கருத்தைப் பிழைத்து நின்ற*  அக் கரு மா முகிலைக் கண்டீரே?* 
    அருத்தித் தாரா கணங்களால்*  ஆரப் பெருகு வானம் போல்* 
    விருத்தம் பெரிதாய் வருவானை*  விருந்தாவனத்தே கண்டோமே*     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொருத்தம் உடைய நம்பியை - பொருத்தமுடைய ஸ்வாமியாய்
புறம்போல் உள்ளும் கரியானை - உடம்புபோலே உள்ளமும் கறுத்திராநின்றவனாய்
கருத்தை பிழைத்து நின்ற - நான் எண்ணும் எண்ணத்தைத்தப்பி நிற்பவனாய்
அக் கரு மா முகிலே - கறுத்துப் பெருத்தமுகில் போன்றவனான அக் கண்ணபிரானை கண்டீரே?
அருத்தி - விரும்பப்பெறுகின்ற

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டில் பொருத்தமிலியைக் கண்டீரே என்றுவைத்து இப்பாட்டில் “பொருத்தமுடைய நம்பியை“ என்றது ஏன்? என்னில், பத்துடையடியவர்க்கு எளியவனான பெருமானையோ நாம் பொருத்தமிலி என்பது, அப்படிச் சொல்வது தகுதியல்ல. அவன பொருத்தமுடையவனேயாவன் என்று திருவுள்ளம்பற்றிச் சொல்லுகிறாள். என்பர் சிலர். அங்ஙன்ன்றியே “இந்தப்பிள்ளை பரமஸாது“ என்றால்அஃது எதிர்மறை இலக்கணையாய் துஷ்டன் என்று காட்டுமாபோலே இங்கும் பொருத்தமுடைய நம்பியென்றது பொருத்தமில்லாமையே சொல்லிற்றாகக் கொள்க இதுவே பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளம்பற்றின கருத்தாம். பொருத்தமிலியென்பது நாட்டில் பொருந்தாரளவில் நிற்கு மன்றன்றோ“ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி -பொருத்தமில்லாதவர்கள் உலகிலும் பலபேருண்டு, அவர்களைப் பொருத்தமிலிகள் என்று சொல்லுகிறாப்போலவே எம்பெருமானையும் பொருத்தமிலி என்று சொல்லிவிட்டால் நாட்டாருடைய பொருத்தமின்மைக்கும் எம்பெருமானுடைய பொருத்தமின்மைக்கும் வாசி ஏற்படாமல் போகுமென்று அதற்காக விலக்ஷணப்ரக்ரியையிலே சொல்லுகிறபடி. அதாவது விபரீதலக்ஷணை.

உரை:2

உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பொருந்திய நம்பியை,  உடல் போலவே உள்ளமும் கருப்பானவனை தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத அந்தக் கரிய நிற முகில் நிறத்தவனைக் கண்டீர்களா ? அருந்ததி முதலான  விண்மீன் கூட்டங்களால் நிறைந்து வழியும் வானம் போல் கூட்டம்  பெரிதாக வருவானை விருந்தாவனத்தே கண்டோமே.

English Translation

“Through and through dark inside and out like a cloud, did you see the Lord whom the mind cannot grasp?” “Like a myriad beautiful stars cluttering the dark wide sky, we saw him with his team coming in Brindavana”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்