விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மைத்தடங் கண்ணி*  யசோதை தன்மகனுக்கு*  இவை- 
  ஒத்தன சொல்லி*  உரைத்த மாற்றம்*  ஒளிபுத்தூர்-
  வித்தகன் விட்டுசித்தன்*  விரித்த தமிழ் இவை* 
  எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு*  இடர் இல்லையே  (2)      

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மை - மையணிந்த
தட - விசாலமாயிராநின்ற
கண்ணி - கண்களையுடையளான
அசோதை - யசோதையானளவள்
தன் மகனுக்கு - தன் மகனான கண்ணனுக்கு

விளக்க உரை

உரை:1

யசோதைப் பிராட்டியானவள் சந்திரனை நோக்கித் தன்மகனுடைய கருத்துக்கு இணங்கின வார்த்தைகளை (‘சந்திரா! வா’ இத்யாதிகளைச்) சொல்லி அச்சமுறுத்தியும் புகழ்ந்தும் பேசின பாசுரங்களை நான் அவளுடைய பாவனைகொண்டு பேசினேன்; இப்பாசுரங்களை எவ்விதமாகவாவது வாய்விட்டுச் சொல்லவல்லவர்கட்குத் துன்பமெல்லாம் நீங்கி ஆநிந்தம் விளையுமென்று - இத் திருமொழிகற்றார்க்குப் பலன்சொல்லித் தலைகட்டினாராயிற்று. நான்காடியில் எத்தனையும் என்றது - யதாசக்தி என்றபடி. அடிவரவு - தன் என் சுற்றும் சக்கரம் அழகிய தண்டு பாலகன் சிறியன் தாழி மை உய்ய.

உரை:2

அகன்ற, பெரிய, அழகிய கண்களை உடையவளான யசோதை அன்னை, தன் மகனான குட்டிக் கண்ணனின் வீர பராக்கிரமங்களையும், அவன் வலிமையையும், மாயசக்திகளைப் பற்றியெல்லாம் பொருந்த சொன்ன, இந்த மேலான உண்மைப் பொருள்களை எல்லாம் மேன்மையுடைய திருவில்லிப்புத்தூர் நகர் வாழ், இறைவனின் தூதுவனான அடியன் விட்டுசித்தன் விரிவாய் உரைத்த, இந்த தீந்தமிழ்ப் பாடல்கள் முழுவதையும் மனமாற சொல்பவர்களை எந்த துன்பமும் தீண்டாது.

English Translation

This decad of sweet Tamil songs by Vishnuchitta, resident of bright Puduvai, recalls the words of bright collyrium-eyed Yasoda, spoken on her son’s behalf. Those how can recite it in any manner will have no despair.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்