விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாழியில் வெண்ணெய்*  தடங்கை ஆர விழுங்கிய* 
  பேழை வயிற்று எம்பிரான் கண்டாய்*  உன்னைக் கூகின்றான்* 
  ஆழிகொண்டு உன்னை எறியும்*  ஐயுறவு இல்லை காண்* 
  வாழ உறுதியேல்*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாழியில் - தாழியிலே (சேமித்திருக்கிற)
வெண்ணெய் - வெண்ணெயை
தட - பெரிதான
கைஆர - கைநிறைய (அள்ளி)
விழுங்கிய - அமுதுசெய்த

விளக்க உரை

உரை:1

சந்திரா! இவன் உன்னை விரும்பி அழைக்கின்றவிது வெண்ணெயை வாரி விழுங்கின செய்திபோலே ஆசையின் கனத்தினாலானது என்னுங்கருத்துப்பட முன்னடிகளருளிச் செய்தபடி. அவ் வெண்ணெய்த் தாழியை இவனுக்கு எட்டாதபடி வைத்தால் கல்லை விட்டெறிந்து அந்தத்தாழியை உடைப்பதுபோல நீயும் வாராதிருந்தால் இவன் சக்ராயுதத்தை உன்மீது பிரயோகித்து உன் தலையையறுத்திடுவான்; இதில் கொஞ்சமேனும் ஸந்தேஹமில்லை; இப்படி இவனுடைய நிக்ரஹத்துக்கு இலக்காகி முடிந்து போகாமல் பிழைத்திருக்க விரும்புவாயாகில் பெருந்தன்மையாய் வந்துவிடு என்பது பின்னடிகளின் கருத்து.

உரை:2

மோர்ப் பானையில் வைத்திருந்த, வெண்ணெய் முழுவதையும், தன் பெரிய கையால் எடுத்து, ஒரே வாயில் விழுங்கி உண்ணுமளவினுக்குப் பெரிய வயிறுடையவன்; எங்கள் குல தெய்வம் உன்னைக் கூவி அழைக்கின்றான். அவன் பல முறை அழைத்தும் நீ வராததால், தன் சக்கராயுதத்தை அனுப்பி, நிச்சயமாக உன்னைக் கொல்லப் போகிறான்.இதில் சந்தேகமே இல்லை. உயிர் வாழ விருப்பம் கொண்டாயானால், மாமதியே! மகிழ்ந்தோடிவந்து என்மகனுடன் விளையாடுவாயாக.

English Translation

O, Big Moon! Look my master who lowered his long arms into the pot and filled his bulging belly with butter calls you. He will spin his discus on you, there is no doubt. If you wish to live, come running willingly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்