விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொல்லாக் குறள் உருவாய்ப்*  பொற் கையில் நீர் ஏற்று* 
    எல்லா உலகும்*  அளந்து கொண்ட எம்பெருமான்* 
    நல்லார்கள் வாழும்*  நளிர் அரங்க நாகணையான்* 
    இல்லாதோம் கைப்பொருளும்*  எய்துவான் ஒத்து உளனே*  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொல்லா குறள் உரு ஆய் - விலக்ஷணவாமநருபியாய்
பொன்கையில் - அழகிய கையாலே
நீர் ஏற்று - பிக்ஷைபெற்று
எல்லா உலகும் - ஸகல்லோகங்களையும்
அளந்து கொண்ட - தன்வசப்படுத்திக்கொண்ட

விளக்க உரை

விலக்ஷணமான வாமநரூபத்தைப் பரிக்ரஹித்து அழகிய கையிலே நீரேற்றுப் பிச்சைவாங்கி, பிச்சையிட்டவன் குடிவாழ்வதற்கும் ஒரடிமண் மிகாதபடி கைலலோகங்களையும் அளந்து ஸ்வாதீதப்படுத்திக்கொண்ட மஹாநுபாவராய், ஸிஷ்டர்கள் வாழ்கிற திருவரங்கத்திலே அநந்தஸாயியாய் எழுந்தருளியிருக்கிற பெரியவர் தரித்ர்ரான நம்முடைய கைப்பொருளையும் (அதாவது - இந்தவுடம்பையும்) கொள்ளை கொள்வார்போலே இராநின்றார் என்கிறாள். பொல்லாக்குறள் - ‘நல்லகுள்ளுருவாய்‘ என்னவேண்டியிருக்க, ‘பொல்லாக்குறளுருவாய்‘ என்றது என்னென்னில், நல்லதென்றால் கண்ணெச்சில் படுமென்று நினைத்து, நல்ல வஸ்துக்கள்மேலே கரிபூசுவாரைப்போலே பொல்லாக்குறள் என்கிறாளென்பர். அன்றியே, அழகிய குறளுருவாய் என்றால் நாட்டிலுள்ள அழகோடு ஸமமாக நினைக்கக்கூடுமென்று விஜாதீயத்வம் தோற்றப் பொல்லாக்குறள் என்கிறாளென்றும் கூறுவர். நல்லார்கள் வாழும் நளிரரங்கம் என்றவிடத்து, “மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிந்தை யளித்திருப்பார், சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கமென்பதுவே“ என்ற பெரியாழ்வார் திருமொழி நினைக்கத்தக்கது.

English Translation

The Lord took water from Bali’s palms; in one stride, he took the Earth as well. Living amid good people in Arangam, he plans to plunder us poor folk now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்