விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சிறியன் என்று என் இளஞ் சிங்கத்தை*  இகழேல் கண்டாய்*
  சிறுமையின் வார்த்தையை*  மாவலியிடைச் சென்று கேள்*
  சிறுமைப் பிழை கொள்ளில்*  நீயும் உன் தேவைக்கு உரியை காண்*
  நிறைமதீ! நெடுமால்*  விரைந்து உன்னைக் கூகின்றான்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நிறை மதி - பூர்ண சந்திரனே!
என் இள சிங்கத்தை - எனக்குச் சிங்கக்குரு போன்ற கண்ணபிரானை
சிறியன் என்று - (உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து
இகழேல் - அவமதியாதே;
சிறுமையில் - (இவனுடைய) பால்யத்தில் நிடந்த

விளக்க உரை

உரை:1

சந்திரா! என் குழந்தையை ‘மற்றுள்ள ஊர்ப்பிள்ளைகளைப் போலே இவனும் ஒரு சிறியவன்தானே’ என்று இகழ்ச்சியாக நினைக்கிறாய் போலும்; அப்பநா நினையாதே; இவன் முன்பொருகால் மாணிக்குறளுருவாய் மாவலியிடஞ் சென்று செய்த காரியங்களை அந்த மஹாபலியையே கேட்டுத் தெரிந்துகொள்; மிகப்பெரியவனான இவனைச் சிறியவனென்று நினைத்து அலட்சியஞ் செய்தவிது மஹத்தான அபசாரம் என்று தாடைமேல் அறைந்து கொள்வாயாகில் பிறகுதான் நீ இவனருகில் வந்து ஏதேனும் அடிமை செய்வதற்கு யோக்யதை பெறுவாய். “சிறுமையின் வார்த்தையை” என்றவிடத்து வார்த்தை என்றது வாய்ச்சொல் என்றபடியன்று; நடவடிக்கை என்றபடி. “வாத-÷õவூவதி:வதெ: = வார்த்தா ப்ரவ்ருத்திர் வ்ருத்தாந்த:” என்பது அமரகோசம். “மாவலியிடைச் சென்று கேள்” என்றதன் கருத்தாவது மாவலியின் கொழுப்பை யடக்கின கதையைக் கொண்டே நீ அவனது பெருமையை அறுதியிடலாமென்க.

உரை:2

முழுநிலவே! என் மகன், நெடுமால், உற்சாகத்துடன் வேகமாக, பலமுறைக் கூவி அழைக்கின்றான். சிறுமதி கொண்ட முழுமதியே! தோற்றத்தில், சிறிய பாலகனாக இருக்கிறானென்று என் சிங்கக் குட்டியை சிறுமையாய் எண்ணிவிடாதே. இச்சிறுமையின் வலிமையை மாவலிச் சக்கரவர்த்தியிடம் சென்று கேட்டுப்பார், தெரியும். இச்சிறு பிள்ளை மட்டும் விசுவரூபம் கொண்டு எழுந்துவிட்டால், நீ இருக்கும் இடம் தெரியாது போய்விடுவாய். சமரசமாக, மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து, என் பாலகனுடன் விளையாடி நற்பலன் பெற்றுக் கொள்வாயாக! விரைந்து நெடுமாலிடம் வருவாயாக, வெண்ணிலவே!

English Translation

O, Full Moon! Do not trifle with my lion-cub for his small size. Go and learn from Mahabali what smallness can do. If you too show regret for trifling him, you too can secure his grace. The Lord of the Universe calls, make haste.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்