விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாறு நறும் பொழில்*  மாலிருஞ்சோலை நம்பிக்கு*  நான்- 
  நூறு தடாவில் வெண்ணெய்*  வாய்நேர்ந்து பராவி வைத்தேன்* 
  நூறு தடா நிறைந்த*  அக்கார அடிசில் சொன்னேன்* 
  ஏறு திருவுடையான்*  இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ!* (2)        

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நறு பொழில் நாறும் - பரிமளம் மிகுந்த பொழில்கள்மணங்கமழா நிற்கப்பெற்ற
மாலிருஞ் சோலை - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற)
நம்பிக்கு - எம்பெருமானுக்கு
நான் - அடியேன்
நூறு தடாவில் - நூறு தடாக்களில் நிறைந்த

விளக்க உரை

இப்பாட்டும் மேற்பாட்டும் இத்திருமொழியில் விலக்ஷணமாக அமைந்த பாசுரங்கள். கீழ்ச்சென்ற பாசுரங்களின் ஸைலியும் மேல்வரும் பாசுரங்களின் தீயமான அமைந்திருக்கிறபடியைக் காண்மின். கீழ்பாட்டில் “எனக்கோர் சரண் சாற்றுமினே“ என்றவாறே தளர்ந்து த்வயாநுஸந்தானம் பண்ணினாள், உத்தரகண்டத்தை நன்றாக அநுஸந்தித்தாள், அதற்கு அர்த்தாதகிய கைங்கரிய ப்ரார்த்தனையிலே ஊன்றினாள், காயிகமான கைங்கரிய மென்றும் செய்யமுடியாதபடி தளர்ந்திருக்கும் தஸையாகையாலே வாசிகமான கைங்கரியம்செய்ய விரும்பினாள். அது செய்தபடியைச் சொல்லுகிறாள் இப்பாட்டில், இப்பாட்டுக்கு ஸேஷபூதம் மேற்பாட்டு. மணங்கமழாநின்ற சோலைகளாலே சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை மலையில் அவாப்த ஸமஸ்தகாமனாய் எழுந்தருளியிருக்கும் எம்பிரானுக்கு அடியேன் நூறுதடா நிறைந்த வெண்ணெயும் நூறுதடா நிறைந்த அக்காரவடிசிலும் வாசிகவுள்ளம் பற்றுவனா? என்கிறாள்.

English Translation

To the Lord of Malirumsolai surrounded by fragrant groves, I give my word to offer a hundred pots of buffer today, and a hundred pots of sweet morsel filled to the brim. Will the Lord of growing affluence deign to accept them?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்