விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தண்டொடு சக்கரம்*  சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்*
    கண் துயில்கொள்ளக் கருதிக்*  கொட்டாவி கொள்கின்றான்*
    உண்ட முலைப்பால் அறா கண்டாய்*  உறங் காவிடில்*
    விண்தனில் மன்னிய*  மா மதீ! விரைந்து ஓடி வா

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விண் தனில் - ஆகாசத்திலே
மன்னிய - பொருந்திய
மா மதீ! - பெருமைதங்கிய சந்திரனே!
தண்டொடு - ‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம் - திருவாழியாழ்வானையும்

விளக்க உரை

உரை:1

உலகத்தில் மனிதர்களுக்கு அதிகமாகக் கொட்டாவி வந்தால் உடனே உறக்கம் வருமென்பது அநுபவஸித்தம் ஆதலால் “கண்டுயில் கொள்ளக்கருதிக் கொடடாவி கொள்கின்றான்” என்கிறாள். இவன் இப்போது கொட்டாவி விடுகிறபடியாலே இனித் தூங்கிவிடுவன்; தூங்காவிட்டாலோ உண்டமுலைப்பால் ஜரியாது; ஆதலால் இவன் உறங்கிப்போவதற்கு முன்னமே விரைந்து ஓடிவா என்றழைக்கிறாள். முதலடியில் மூ­ன்று ஆயுதங்களைச் சொன்னது பஞ்சாயுதங்கட்கும் உபலக்ஷணம். இவ்வாயுதங்களின் அஷீகை ஸேவித்துப்போக வேண்டுவது உனக்கு உரியதேயன்றி இவற்றின் பராக்கிரமத்திற்கு இலக்காகி முடிந்து போகப் பாராதே என்றுணர்த்தியவாறு. அறா - அறாது; ஜரியாது.

உரை:2

விண்ணிலே நிலைபெற்ற முழுமதியே! எத்துனை முறைதான் என் மகன் உன்னையேக் கூவி அழைத்துக் கொண்டிருப்பான். தன் வலிமையான பிஞ்சு கைகளில் கௌமோதகி என்கிற கதையுடன், சுதர்சன சக்கரத்தையும், சார்ங்கம் என்ற வில்லினையும் வைத்திருப்பவன், தூக்கமயக்கம் தழுவுவதால் உறங்குவதற்கு நிமித்தமாய் வாய்வழியே நெடுமூச்சு விடுகின்றான். இதோ பார் வெண்மதியே!அவன் சரியான நேரத்திற்கு, உறங்கினால் தான் அவன் நிறைவாய் உண்ட தாய்ப்பாலும் செரிமானமாகும். என் மகன், கண்ணுறக்கம் கொள்ளவேண்டும்; தாமதிக்காமல் விரைந்தோடிவா, வெண்ணிலவே!

English Translation

O, Big Moon set in the wide sky! The Lord with mighty arms that hold the mace, discus and bow yawns as he goes to sleep. If he does not sleep, the breast-milk he drank will not be digested, see! So come quickly! Make haste and come.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்