விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அழகிய வாயில்*  அமுத ஊறல் தெளிவுற*
  மழலை முற்றாத இளஞ்சொல்லால்*  உன்னைக் கூகின்றான்*
  குழகன் சிரீதரன்*  கூவக் கூவ நீ போதியேல்*
  புழையில ஆகாதே*  நின்செவி புகர் மா மதீ!

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புகர் - தேஜஸ்வியாய்
மா - பெருமைபொருந்தியிராநின்ற
மதீ - சந்திரனே!
அழகிய வாயில் - அழகிய திருப்பவளத்திலே
ஊறல் - ஊறுகின்ற ஜலமாகிய

விளக்க உரை

உரை:1

சந்திரா! உன்னைக் கூவி அழைக்கிற இக் குழந்தையின் இனிய மழலைச் சொல் உன் காதில் விழவில்லையா? செவிடனா நீ? உன் காதில் துளையில்லையோ? இக்குழந்தை இனிய முற்றாமழலைச் சொல்லினால் உன்னை அழைக்கவும் நீ காது கேளாதாரைப்போல போய்விட்டாயானால் நீ காது படைத்தது பயனற்றதாகுமன்றோ என்கிறாள். இப்படிப்பட்ட இளஞ்சொல்லைக் கேட்டு உடனே ஓடி வருதலே செவிபடைத்ததற்குப் பலன் என்று காட்டினவாறு. மழலை - எழுத்துகள் ஸ்பஷ்டமாகத் தெரியாதே மதுரமாயிருக்குமது. மழலைமுற்றாத இளஞ்சொல் என்றது – மழலைத் தனத்துருக்குள்ள முற்றுதலுமில்லாத மிக இளஞ்சொல் என்றபடி. குழகன் – “கொடுத்தார் கொடுத்தார் முலைகளெல்லா முண்டு எடுத்தாரெடுத்தாரோடெல்லாம் பொருந்தியிருக்கும் கலப்புடையவன்” என்பது வியாக்கியான வாக்கியம்.

உரை:2

குழந்தை கண்ணனின் அழகிய பவளவாயில் ஊறுகின்ற எச்சில் அமுதத்துடன் கலந்து, தெளிவுறாத, குழந்தைத்தனம் மாறாமல் வருகின்ற மழலைச் சொற்களால் உன்னைக் கூவி அழைக்கின்றான். அழகன், குழந்தையாயிருக்கின்ற திருமகள் கேள்வன் கொஞ்சிக் கொஞ்சி உன்னை பல முறை அழைத்தும் நீ விலகி விலகிப் போகின்றாயே வட்டநிலவே. முழுநிலவே! உனது செவிகள் அடைக்கப்பெற்றுவிட்டனவோ?? இந்த பௌர்ணமி நாளில் நீ பூரணமாய் ஒளிவீசி, முழுமைப் பெற்றுத் தோன்றினாலும், கேளா செவிகளைக் கொண்டிருப்பதால் நீ குறையுடையவனே. அப்படியே, நினது செவிகள் கேட்கும் தன்மைக் கொண்டவையாயிருந்தாலும், இப்பாலகனின் மழலைக் குரலுக்கு செவிமடுக்காமையால், இனி, அவை செயலிழந்து போகட்டும், சந்திரனே!

English Translation

O, Big bright Moon! The adorable Sridhara with spittle dripping from his beautiful mouth, blabbers indistinctly, coos and calls to you. If you go on ignoring his calls, would it not mean that your ears are without a bore?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்