விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாஞ்சசன்னியத்தைப்*  பற்பநாபனோடும்* 
    வாய்ந்த பெருஞ் சுற்றம் ஆக்கிய*  வண்புதுவை* 
    ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான்*  கோதை தமிழ் ஈரைந்தும்*
    ஆய்ந்து ஏத்த வல்லார்*  அவரும் அணுக்கரே*. (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாஞ்சசன்னியத்தை - சங்கை
பற்பநாபனோடும் - எம்பெருமானோடே
வாய்ந்த - பெருசுற்றம் ஆக்கிய
தமிழ் ஈர் ஐந்தும் - இத்தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும்
ஆய்ந்து - அநுஸந்தித்து

 

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லி முடிக்கிறாள் இதில், ஸ்ரீ பாஞ்ச ஜந்யத்தை நோக்கி “மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்“ என்றமையால் இச்சங்குதான் எம்பெருமானுக்குக் கிட்டின வுறவுடையது என்று ஆண்டாளுடைய கருத்தாயிருந்தது, அதுதோன்ற அருளிச்செய்கிறாள் - “பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனொடும் வாய்ந்தபெருஞ்சுற்றமாக்கிய“ என்று நெருங்கின பந்துத்வ முடையதாகக் கொண்டு சொன்ன என்றபடி. ஆக்கிய என்ற அடைமொழி கோதைக்குமாகலாம். கோதை தமிழ்க்குமாகலாம். “ஏய்ந்தபுகழ்“ என்ற அடைமொழி பட்டர்பிரானிடத்து அந்வயிக்கத்தகுமாயினும் கோதையிடத்து அந்வயித்தருளினர் பெரியவாச்சான்பிள்ளை. தமிழ் - தமிழாலாகிய பாசுரங்கட்டு ஆகுபெயர். ஆய்ந்து ஏத்தவல்லா ரவரும் - இத்திருவாய்மொழி முழுவதும் பாஞ்சஜந்யத்தைப் பற்றிச் சொல்லிற்றேயன்றி எம்பெருமானைப்பற்றி இதில் ஒன்றுமில்லையேயென்று கருதிவிடாமல் இதுவும் எம்பெருமானுடைய பெருமையில்தான் சென்று முடிகின்றதென்று ஆராய்ந்து அநுஸ்திக்கவல்லவர்கள் என்றபடி. எம்பெருமானுடைய திருவாயமுகத்தின் இனிமையும் அவனுடைய ஆச்ரிதபக்ஷபாதமும் இத்திருமொழியில் விளங்கக்காண்க. அணுக்கர் - அன்புடையார், அந்தரங்கர்.

English Translation

This decad of Tamil songs by Goda, daughter of the celebrated Pattarbiran of ancient Puduvai, unities a conch Panchajanya with the Lord Padmanabha in an exalted relationship. Those who sing it with feeling will become devotees of the Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்