விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சக்கரக் கையன்*  தடங்கண்ணால் மலர விழித்து*
  ஒக்கலைமேல் இருந்து*  உன்னையே சுட்டிக் காட்டும் காண்*
  தக்கது அறிதியேல்*  சந்திரா! சலம் செய்யாதே*
  மக்கட் பெறாத*  மலடன் அல்லையேல் வா கண்டாய்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சந்திரா - சந்திரனே!
சக்கரம் - திருவாழி ஆழ்வானை
கையன் - திருக்கையிலணிந்த கண்ணபிரான்
ஒக்கலை மேல் - (என்) இடுப்பின்மேல்
இருந்து - இருந்துகொண்டு

விளக்க உரை

உரை:1

சந்திரா! இவனை வெறுங்குழந்தையாக நினைத்து அலட்சியஞ் செய்திடாதே; இவன் சக்கரக்கையன் காண்; நீ வராமல் இருப்பாயானால் உன்மேல் சக்கரத்தைப் பிரயோகித்து உன்னைத் தண்டித்துவிடுவன் என்னும் கருத்தையடக்கி சக்கரககையன் என்கிறாள். “ஆழிகொண்டுன்னை யெறியும் ஐயுறவில்லை காண்” என்று மேலே ஸ்பஷ்டமாகவுங் கூறுவள். மக்கள் பெறாத மலடனல்லையேல் வா = குழந்தையை நீ இப்படி துடிக்க விடுவது தகுதியன்று; பிள்ளை பெறாதவர்களன்றோ பிள்ளையின் வருத்தமறியார்கள்; அப்படி நீ மலடனல்லையே; பிள்ளைகளை வருத்தப்படுத்தக்கூடாதென்பது உனக்குத் தெரியுமே என்றவாறு.

உரை:2

உன்னினும் பொலிவுடைய, வடிவான சுதர்சன சக்கரத்தைக் கொண்டிருப்பவன் என் மகன்; தன் பெரிய அழகிய கண்கள் விரிய உன்னையே பார்த்து வேங்கட மாமலை மேல் வீற்றிருப்பவன், இப்போது என் இடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு, என் தாவாயைத் திருப்பித் திருப்பி, உன்னையே மீண்டும் மீண்டும் சுட்டிக் காட்டுகின்றதைப் பார் சந்திரனே! இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று உனக்குத் தெரியவில்லையா சந்திரா! பிடிவாதம் செய்யாமல் இறங்கி வந்து இந்த கார்மேகத்துடன் விளையாடுவாயாக ஒரு மழலையின் விருப்பம் உனக்குப் புரியவில்லையா? மக்கட் செல்வம் வாய்க்கப் பெறாத மலடனல்லவே நீ. ஆகவே, உடனடியாக நீ இங்கே, இவ்விடத்தில் வந்து என் பிள்ளையுடன் விளையாடுவாயாக.

English Translation

O, Full Moon! The discus-wielding Lord with his large eyes opened wide, seated on my waist, points at you alone. Know what is proper, and do not deceive him. If you are not a child-less sterile, take note and come.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்