விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாய் நல்லார்*  நல்ல மறை ஓதி மந்திரத்தால்* 
    பாசிலை நாணல் படுத்துப்*  பரிதி வைத்து* 
    காய் சின மா களிறு*  அன்னான் என் கைப்பற்றி* 
    தீ வலஞ் செய்யக்*  கனாக் கண்டேன் தோழீ நான்*      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வாய் நல்லார் - நன்றாக ஓதின வைதிகர்கள்
நல்ல மறை ஓதி - சிறந்த வேதவாக்கியங்களை உச்சரிக்க,
மந்திரத்தால் - (அந்தந்தக்ரியைகளுக்கு இசைந்த) மந்த்ரங்களைக்கொண்டு
பாசு இலை நாணல் படுத்து - பசுமைதங்கிய இலைகளையுடைத்தான நாணற்புல்லைப் பரிஸ்தரணமாக அமைத்து
பரிதி வைத்து - ஸமித்துக்களை இட்டு

விளக்க உரை

நல்ல சொற்களையே பேசுபவர்கள் மேன்மையான மறைச் சொற்களைச் சொல்லி பச்சை இலைகளுடன் கூடிய நாணலைக் கதிரவன் முன் வைத்த பின், எரியும் நெருப்பைப் போல் கோப குணம் கொண்ட யானையைப் போன்றவன் என் கையைப் பற்றி தீயை வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்

English Translation

I had a dream O sister! Learned priests recited from the Vedas and laid the faggots on the Darbha grass with Mantras. Like an angry elephant-bull, he led me around the fire-altar.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்