விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்றுலகம் அளந்தானை யுகந்தது*  அடிமைக் கணவன் வலி செய்ய* 
    தென்றலும் திங்களும் ஊடறுத்து*  என்னை நலியும் முறைமை அறியேன்* 
    என்றும் இக்காவில் இருந்திருந்து*  என்னைத் தகர்த்தாதே நீயும் குயிலே!* 
    இன்று நாராயணனை வரக் கூவாயேல்*  இங்குற்று நின்றும் துரப்பன்*. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - மஹாபலி கொழுத்திருந்த அக்காலத்  தில்
உலகம் அளந்தானை - மூவுலகங்களையும் அளந்துகொண்ட வனான எம்பெருமான் விஷயத்திலே
உகந்து - நான் கைங்கர்யத்தை ஆசைப்பட,
அவன் - அவ்வெம்பெருமான்
அடிமைக்கண் - (அந்த) கைங்கரியத்திலே
வலி செய்ய - வஞ்சனை பண்ண

விளக்க உரை

எம்பெருமானுடைய பரத்வமொன்றே என்நெஞசிற்பட்டிருந்தால் அவனை நான் ஆசைப்படமாட்டேன், முன்பொருகால், த்ரிவிக்ரமாவதார வ்யா ஜத்தாலே வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராமல் எல்லார் தலையிலும் திருவடியைக் கொண்டு வைத்தானென்று கேள்விப்பட்டேனாகையால் அவன்மிக்க ஸௌசீல்யகுணம் பொருந்தியவனனென்றுணர்ந்து, தன்னை ஆசைப்படாத வுலகங்கட்கே அவன் அவ்வளவு காரியம் தன்பெறாகச் செய்தபோது ஆசைப்பட்ட நம்மை உபேக்ஷிப்பனா என்று நினைத்து அவ்வுலகளந்த பெருமான் திருவடிகளில் நான் கைங்கரியம் பண்ணிரும்பினேன், அக்கைங்கரியம் அடியேனுக்கு ப்ராப்தமாக வொண்ணாதபடி அப்பெருமான் சில மிறுக்குக்களைப் பண்ணவே, தென்றல் திங்கள் முதலிய பாதகபதார்த்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துகொண்டு ‘நாம் இவளை ஹிம்ஸிப்பதற்கு இதுவே வாய்த்த ஸமயம், எம்பெருமான் இவளை இகழ்ந்திருக்கும் இச்சமயமே நாம் தாராளமாக இவளைவருத்தக்கூடிய சமயமாகும்‘ என்று துணிந்து அவை என்னைப் படுத்தும்பாடுகளை நான் வாய்கொண்டு சொல்லவல்லேனல்லேன் அவை என்னை பரிதபித்துக்கொண்டு கத்றாநிற்கையில் அச்சோலையிற் குயிலானது தன் களிப்புக்குப் போக்குவீடாக இனியபாட்டுகளைப் பாடத்தொடங்கவே அது இவளுக்கு மிகவும் பாதகமாகி, ‘ஓ குயிலே! தென்றலும் திங்களும் என்னை ஹிம்ஸிப்பது ஸ்வல்பமாய், உன்னுடைய ஹிம்ஸையே அளவற்றதாயிருக்கிறது, அல்லும்பகலும் இடைவிடாதேயிருந்து நீ என்னை ஹிம்ஸிக்கிறாய், இதற்காகவா உன்னை நான் இச்சோலையிலே இடங்கொடுத்து வாழ்விப்பது? நன்று செய்கின்றாய்!, இதுவரை போனது போகட்டும், இந்தக்ஷணத்தில் திருமால் இங்கே எழுந்தருளும்படி கூவ்வல்லையாகில் கூவி அவனை இங்குவரவழை, இல்லையாகில் தடியெடுத்துரைத்து உன்னை இச்சோலையிலிருந்து துரத்திவிடுவென் - என்கிறார்.

English Translation

The Lord whom I love has denied me the pleasure of service. I do not know why even the Moon and the breeze pierce and hurt me. Not you too, O Koel, staying on to add punch! If you do not call my Narayana now, I shall drive you out of here forever.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்