விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் சிறுக்குட்டன்*  எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்*
    தன் சிறுக்கைகளால்*  காட்டிக் காட்டி அழைக்கின்றான்*
    அஞ்சன வண்ணனோடு*  ஆடல் ஆட உறுதியேல்*
    மஞ்சில் மறையாதே*  மா மதீ! மகிழ்ந்து ஓடி வா 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எனக்கு - (தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது - விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான் - எனக்கு உபகாரகனான
என் சிறுக்குட்டன் - என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால் - தன்னுடைய சிறிய கைகளால்

விளக்க உரை

சிறு குழந்தைகளை மாமா முதலாயினோர் மாலைப்பொழுதில் இடுப்பிலெடுத்துக் கொண்டு ``சந்த மாமா! வா வா வா’’ என்று சொல்லக் கற்பித்துக் கையால் அழைக்கும்படி செய்வதும் உலக வழக்கமாதலால் அப்படியே கண்ணபிரானும் அழைக்கிறானென்க. சந்திரன் மேகத்தில் மறைந்து போவது இயல்பாதலால் அப்படி மறைந்து போகவேண்டா வென்கிறாள். மறையாதே என்பதை எதிர்மறை வினைமுற்றாகவுங் கொள்ளலாம்.

English Translation

O, Great moon! My dark hued little child, my sweet ambrosia, my master calls and beckons to you with his wee hands. If you wish to play with him, do not hide behind the clouds. Come running here happily.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்