விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊடல் கூடல்*  உணர்தல் புணர்தலை* 
    நீடு நின்ற*  நிறை புகழ் ஆய்ச்சியர்* 
    கூடலைக்*  குழற் கோதை முன் கூறிய* 
    பாடல் பத்தும் வல்லார்க்கு*  இல்லை பாவமே* (2)          

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊடல்கூடல் - ஊடலோடே கூடியிருக்கையென்ன, (அதாவது ப்ரணயரோஷஸஹிதைகளா யிருக்கை யென்ன)
உணர்தல் - குறைகளை உணர்த்துகை யென்ன
புணர்தல் - (பிறகு) ஸம்ச்லேஷிக் கையென்ன (இப்படிப் பட்டகாரியங்களிலே)
முன் - அநாதிகாலமாக
நீடு நின்ற  - நீடித்துப் பொருந்தி நின்ற

விளக்க உரை

உரை:1

இத்திருமொழி கற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறது இப்பாட்டு. “ஊடல்கூடல்” என்றது-ஊடலென்ன கூடலென்ன என்று இரண்டாகச் சொல்வதல்ல’ ஊடலோடு கூடுகை யென்றாய் ஊடுகையை மாத்திரம் சொல்லிற்றாகக்கொள்க. ஊடலாவது ப்ரணய கலஹம்’ ஊடல்கூடலாவது அதை உடைத்தாயிருக்கை’ ப்ரணயரோஷவிசிஷ்டத்வம். “போதுமறித்துப் புறமே வந்து நின்றீர், ஏதுக்கிதுவென இதுவென்இது வென்னா?” என்றும் “என்னுக்கு அவளை விட்டிங்குவந்தாய் இன்ன மங்கே நட நம்பி! நீயே” என்றும், “உன்னுடைய சுண்டாயம் நானறிவன் இனியது கொண்டு செய்வதென், என்னுடைய பந்துங்கழலும் தந்து போகு நம்பீ!” என்றும் இப்புடைகளிலே சொல்லி எம்பெருமானைக் கிட்டவர வொட்டாமல் கதவடைத்துத் தள்ளுகை ஊடல் எனப்படும். உணர்தல் ஸ்ரீ “உணர்த்தல்” என்று பிறவினையாயிருக்க வேண்டுவது ஓசையின்பம்நோக்கி ‘உணர்தல்’ என்று பிரயோகிக்கப் பட்டிருக்கிறதென்று ஒருபெருங்கல்வியாளர் சொல்லுவர். ஸம்ச்லேஷம் பெறாமல் தாங்கள் துடிக்கிறபடியை எம்பெருமானுக்கு நோpலும் தூரிதுமூலமாகவும் தெரிவித்தல். உணர்தல் என்றதற்கு இங்கு இதுவே பொருள் என்பர். இனி, புணர்தலாவது இவர்களுடைய துடிப்பை எம்பெருமான் நன்கு அறிந்து “உங்களை விட்டால் எனக்கு வேறு புகலுண்டா? என்னை வேறாநினைக்கலாமா? அடியேனல்லேனோ? தாஸனல் லேனோ?” என்றாற்போலே ஆற்றாமை மீதூரிர்ந்தமை தோற்றப் பலபாசுரங்களைச் சொல்லிக்கொண்டு சுவரார் கதவின் புறமே வந்து நிற்பது முற்றம் புகுந்து முறுவல் செய்து நிற்பதாய் நெருங்கினவாறே இவர்களும் பரவசைகளாய் அவனோடு கலந்து பாரிமாறுகை. ஆக, ப்ரண்ய ரோஷந் தோற்றப் பேசுகையென்ன, தங்கள் வருத்தம் அவன் திருவுள்ளத்திலே படும்படி உணர்த்துவதென்ன, பின்பு இஷ்டப்படி ஸம்ச்லேஷிக்கையென்ன ஆகிய இப்படிப்பட்ட காரியங்களே யாத்திரையாயிருப்பவர்கள் ஆய்ச்சிகள் என்றவாறு.

உரை:2

"கோதை. பார்த்தாயா இந்த அழகை? நீ ஒவ்வொரு முறை கூடல் இழைக்கும் போதும் அது கூடலாகவே வருகிறது. ஒற்றையாய் நிற்கவில்லை. நீ நினைப்பது நிச்சயம் நிறைவேறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நீ இனி துயர் தீர்ந்து மகிழ்ந்திருக்கலாம். நானே உன் தந்தையாரிடம் நாம் கூடல் இழைத்துப் பார்த்ததைக் கூறி அவர் துயரும் தீர்ந்து இருக்குமாறு கூறிவிடுகிறேன். வருந்தற்க'.
ஊடலையும் கூடலையும் உணர்தலையும் புணர்தலையும் நிலைத்து நின்ற புகழ் கொண்ட ஆய்ச்சியரின் கூடலையும் கூறிய அழகிய குழலைக் கொண்ட கோதையின் பாடல் பத்தையும் கூறுவார்க்கு இல்லை பாவமே"

English Translation

My handsome one is the sweet sap of the four Vedas. He gave life to the elephant Gajendra in distress. He lives in the hearts of beautiful cowherd-dames. If he will come, then join, O Lord-of-the-circle.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்