விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தன்முகத்துச் சுட்டி*  தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்* 
    பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப்*  புழுதி அளைகின்றான்*
    என்மகன் கோவிந்தன்*  கூத்தினை இள மா மதீ!* 
    நின்முகம் கண்ணுள ஆகில்*  நீ இங்கே நோக்கிப் போ (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இள - இளமை தங்கிய
மா மதி - அழகிய சந்திரனே!
தன் முகத்து - தன்முகத்தில் (விளங்குகிற)
கட்டி - கட்டியானது
தூங்க தூங்க - பலகாலும் தாழ்ந்து அசையவும்

விளக்க உரை

உரை:1

சந்திரா! எனது குழந்தையாகிய இக்கோபாலகிருஷ்ணன் தனது நெற்றியிலே சுட்டி அசையவும் அரையிலே சதங்கை கிண்கிண் என்று சப்திக்கவும் தவழ்ந்துவந்து புழுதியளைகின்றான்; இந்த விளையாட்டைக் கண்டால் தான் நீ கண்பைடத்த பயன் பெறுவாய்; ஆகையாலே இவ்விளையாட்டைக் காண்கிற வியாஜமாக நீ இங்கே வந்து இக்குழந்தையின் கண்ணிலே தென்படுவாயாக என்று யசோதைப்பிராட்டி சந்திரனை யழைக்கிறாள்.

உரை:2

குழந்தை கண்ணன் நெற்றியில் அணிந்துள்ள அழகிய சுட்டியானது, அவன் மாளிகை முற்றத்தில் தவழும் பொழுது அவன் அசைவதற்கேற்ப அதுவும் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றது.அவனது காற் சதங்கைகளில் கோர்த்துள்ள பொன்னாலான கிண்கிணிகள் ஒலியெழுப்ப, தேகமெங்கும் புழுதியாகுமாறு மணலில் விளையாடுகின்றான்.என் மகன் கோவிந்தன், புழுதி மணலில், புரண்டு புரண்டு ஆடுகின்ற, விளையாடுகின்ற அழகினை அந்தி நேரத்தின் அழகிய முழு நிலவேஏஏ! உன் வட்ட முகத்தில் கண்ணிருக்கின்றதென்றால், நீ என் மகன் கோவிந்தன் விளையாடும் இடம் நோக்கிப் போவாயாக.

English Translation

O, Tender Moon! If you have eyes on your face, come and see my child Govinda’s pranks as he crawls, kicking up dust. His forehead pendant sways, his golden anklet jingles.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்