- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
தெள்ளியார் பலர்* கைதொழும் தேவனார்*
வள்ளல்* மாலிருஞ்சோலை மணாளனார்*
பள்ளி கொள்ளும் இடத்து* அடி கொட்டிடக்*
கொள்ளுமாகில்* நீ கூடிடு கூடலே!* (2)
காணொளி
பதவுரை
கூடலே - கூடல் தெய்வமே!
தெள்ளியார் பலர் - தெளிவுடைய பக்தர்கள் பலர்
கைதொழும் - கைகளார வணங்கப் பெற்ற
தேவனார் - ஸ்வாமியாய்
வள்ளல் - பரமோதாரனாய்
விளக்க உரை
அறிவில் தெளிந்து ஞானம் பெற்றவர் பலர் தொழும் தேவனாம், கேட்டதெல்லாம் கொடுக்கும் வள்ளல், திருமாலிருஞ்சோலை வாழ் என் மணாளனார் பள்ளி கொள்ளும் போது அவர் கால்களை நான் வருடிடும் பேறு எனக்குக் கிட்டுமாகில் நீ கூடிடு கூடலே.
English Translation
The Lord worshipped by bards and celestials is the affluent bridegroom of Malirumsolai. Will I fine entry into his bed-chamber? If he will come, then join, O Lord of the circle.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்