- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘இப்பெண்களும் நாம் சொன்னதுக்கெல்லாம் மறுமொழி சொல்லாநின்றார்கள்’ இவர்களுக்குச் செய்யவேண்டிய வழி இதுவன்று, அச்சமுறுத்திக் காரியங் கொள்ளவேணும்’ என்றெண்ணி, சிலர்வருவதாகக் கொண்டு சுற்றும் பார்த்து உடம்பை ஒடுக்குவது, மறுபடியுஞ் சிலர்வருவதாகக் கொண்டு கூசினவன் போல் அத்திக்கிலே சில தழைகளை யிட்டு மறைப்பது. இப்படி ஆய்ச்சிகள் அஞ்சும்படியான சில வியாபாரங்களைச் செய்தான்’ இவன் செய்கிற இச்செயல்களுக்கெல்லாம் ஸம்பாவநையுள்ளவிடமாயிருந்தது அவ்விடம் - அது பலரும் வரக்கூடிய சுனையாகையாலே, இவனுடைய பயங்கரமான செயல்களாலும், தாங்களிருக்குமிடம் அனைவர்க்கும், இவனுடைய பயங்கரமான செயல்களாலும், தாங்களிருக்குமிடம் அனைவர்க்கும் பொதுவான தென்னுமத்தாலும் இவ்வாய்ச்சிகளுக்குத் துணுக்கென்று கண்ணீர் பெருகத் தொடங்கிற்று’ அக்கண்ணீர்ப் பெருக்கை இவர்கள் தாம் மிகவருந்தி அடக்கப்பார்த்தவிடத்தும் அஃது அடங்காதொழிந்தது. பிறகு சடக்கென யார் வருவாரோ! என்கிற அச்சத்தினாலும் கண்ணீர் நில்லாமையாலும், ‘நம் கதி இவ்வறாயிற்றே’ என்று கிடந்து துடியா நின்றார்களாய், ‘பிரானே! நீ எமக்குச் சேலை தாராதொழியினும் ஒழிக’ நாங்கள் படுகிற அலமாப்பைக் கண்கொண்டு பார்த்தாயாகில் போதுமித்தனை’ என்றார்கள். இங்ஙனே இவர்கள் வேண்டச் செய்தேயும் கண்ணபிரான் கண்ணற்றவன் போலே பாராதே யிருந்தான்’ “இரக்கமேலொன்றுமிலாதாய்” என்று நெஞ்சில் உறுத்தும்படி விளிக்கின்றனர். (“இலங்கையழித்தபிரானே!”) இன்று இங்ஙனே எம்மை வருத்துகின்ற நீ முன்பு ஒரு பிராட்டிக்காக உண்ணாது உறங்காது ஒலிகடலை யூடறுத்துப் படாதென பட்டாய் என்று புராணங்களில் எழுதி வைத்திருப்பது பரமஸத்யமே, அது தான் யார் சமைத்த அபத்த பஞ்சாங்க மோ! என்று உபாலம்பந்தோற்றக் கூறுகிறபடி.
English Translation
Come now, what childishness is this, sitting on the Kurundu tree? Our mothers will not approve of it; do you not consider it bad? O Sire who destroyed Lanka with a bow, we will give you all you ask for and go home unseen. Pray hand us our clothes.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்