விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மெய் திமிரும் நானப்*  பொடியொடு மஞ்சளும்*
    செய்ய தடங்கண்ணுக்கு*  அஞ்சனமும் சிந்துரமும்*
    வெய்ய கலைப்பாகி*  கொண்டு உவளாய் நின்றாள்*
    ஐயா! அழேல் அழேல் தாலேலோ* 
     அரங்கத்து அணையானே! தாலேலோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மெய் - திருமேனியிலே
திமிரும் - பூசுகைக்குரிய
நானம் பொடியோடு - கஸ்தூரி, கருப்பூரம், சந்தநம் முதலிய ஸூகந்தப் பொடிகளையும்
மஞ்சளும் - மஞ்சள்பொடியையும்
செய்ய - சிவந்ததாய்

விளக்க உரை

உரை:1

துர்க்காதேவியானவள் வாசனைப்பொடி முதலியவற்றைக் கொண்டு ஸமர்ப்பிக்க வந்திருக்கிறாளென்று சொல்லித் தாலாட்டுகின்றாள். துர்க்கைக்கு மான் வாஹனமாகையால் கலைப்பாகி எனப்பட்டது. ‘பாகன்’ என்பதன் பெண்பால் பாகி என்பது; மானின்மேல் ஏறிக்கொண்டு அதனைச் செலுத்துபவள். கலா என்ற வடசொல் ‘கலை’ என ஐயீறாகத்திரிந்ததென்று கொண்டு நூற்கலைகளை நடத்துகிற ஸரஸ்வதி என்று பொருள்கொள்வதும் ஏற்கும்; இப்பொருளில் வெய்ய என்பதற்கு-விரும்பப்படுகின்ற என்று பொருள். இத்திருமொழியில் முதற்பாட்டில் பிரதானனாகப் பிரமதேவன் சொல்லப்பட்டபடியால் அவனுக்குப் பத்தினியான ஸ்ரஸ்வதியை இப்பாட்டிற் சொல்லிமுடிக்கிறதென்று கொள்வது மிகவுமிணங்கும்.

உரை:2

உன் நறுமணக் குளியலுக்கு நாற்றப் பொடியும், மஞ்சளும் செய்து, குளித்த பின் பெரிய கருவிழிகளில் பூச மையும், நெற்றியில் இட சிந்துரமும் விரையும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட காளி (அ) துர்க்கை உனக்குத் துணையாக இருக்கின்றாள் அரங்கத்தில் பள்ளி கொண்ட அய்யனே அழாது கண்ணுறங்கு.

English Translation

The deer-riding-goddess Parvati stands betwixt, with gifts of refreshing bath-fragrance and turmeric powder, collyrium for your large lotus eyes and vermillion power. O, Sir don’t cry, don’t cry, Talelo. Lord reclining on a serpent in Tiru-Arangam, Talelo.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்