விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கச்சொடு பொற்சுரிகை*  காம்பு கனகவளை*
    உச்சி மணிச்சுட்டி*  ஒண்தாள் நிரைப் பொற்பூ*
    அச்சுதனுக்கு என்று*  அவனியாள் போத்தந்தாள்*
    நச்சுமுலை உண்டாய்! தாலேலோ*
    நாராயணா! அழேல் தாலேலோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கச்சொடு - கச்சுப்பட்டையையும்
பொன் - பொன்னாற்செய்த
சுரிகை - உடைவாளையும்
காம்பு - கரைகட்டிய சேலையையும்
கனம் - கநகமயமான

விளக்க உரை

இடுப்புக் கச்சையோடு, தங்கத்தாலான குறுவாள், பட்டாடை, தோளில் அணியும் வளை இவற்றோடு நெற்றியில் அணிய மணி ஆடும் சுட்டியும், ஒப்பற்றத் திருவடிகளுக்கு பொன்னாலான பூவும் அச்சுதன் என்றழைக்கப் படும் உனக்காக நிலமகள் அனுப்பி இருக்கிறாள் இங்கன ஏன் அச்சுதன் பேர் குறிப்பிடுறார் ஆழ்வார்? அச்சுதன் என்ற பெயரின் விளக்கத்தில் பொருள் புரியுமோ? பூதகியின் நச்சுப்பால் உண்ட நாராயணனே அழாது கண்ணுறங்கு.

English Translation

Goddess Earth has sent a golden diaper pin, golden bangles, a jewel-studded forehead pendant, and a hairpin with flowers of gold marked, ‘For Achyuta’. O, Child who sucked the poisoned breast, Talelo. Narayana, don’t cry, Talelo.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்