விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுவரில் புராண! நின் பேர் எழுதிச்*  சுறவ நற் கொடிக்களும் துரங்கங்களும்* 
    கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்*  காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா* 
    அவரைப் பிராயம் தொடங்கி*  என்றும் ஆதரித்து எழுந்த என் தட முலைகள்* 
    துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்*  தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புராண - நெடுநாளாக எனக்கு உபகரிக்கு மவனே!
காமதேவா - மன்மதனே!
சுவரில் - சுவரிலே
நின்போ; - உனது பெயர்களை
எழுதி - எழுதி

விளக்க உரை

சுவரில் கண்ணன் பெயரெழுதி மீன் கொடிகளும் குதிரைகளும் கவரி கொண்டு செய்த சாமரம் வீசும் பெண்களும்கரும்பு வில்லும்எல்லாம் உனக்கே வரைந்தேன் பார் காமதேவாஅவரைச் சிறு வயது முதலிருந்தே என்றைக்கும் விரும்பி என்  பெரிய முலைகள் துவாரகை மன்னனாகிய கண்ணனுக்கே உரியது என்று வேண்டி வைத்தேன் இதை விரைவாகச் செய்து என்னை அவருக்கே ஆட்படச் செய்வாயாக !

English Translation

I write your name on the walls. O Fabled god of love! I draw stallions, banners with fish emblem, bows of sugarcane and whisk waving maidens. My amorous breasts have swelled and grown mature precociously. Pray make haste and deliver them to Krishna, Lord of Dvaraka.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்