விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கானார் நறுந்துழாய்*  கைசெய்த கண்ணியும்* 
  வானார் செழுஞ்சோலைக்*  கற்பகத்தின் வாசிகையும்*
  தேனார் மலர்மேல்*  திருமங்கை போத்தந்தாள்* 
  கோனே! அழேல் அழேல் தாலேலோ* 
   குடந்தைக் கிடந்தானே! தாலேலோ

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தேன் ஆர் - தேன் நிறைந்துள்ள
மலர்மேல் - (செந்தாமரை) மலரிலுறைகின்ற
திருமங்கை - பெரிய பிராட்டியார்
கான் ஆர் - காட்டிலுண்டான
நறு துழாய் - பரிமளம்மிக்க துளஹியாலே

விளக்க உரை

உரை:1

நல்ல திருத்துழாய் மாலை முதலியவற்றைப் பெரிய பிராட்டியார் கொடுத்தனுப்பினளென்று சொல்லித் தாலாட்டுகிறாள். காநநம் என்ற வடசொல் கான் எனச் சிதைந்தது. தன்னிலத்தில் வளர்ந்ததனால் மணங்குன்றாத திருத்துழாய் என்றபடி. கைசெய்த என்ற விடத்து, கை - தமிழுபசர்க்கம். குடந்தை - கும்பகோணம். குடமூக்கு என்பது முழுப்பெயர். அதில் ஏகதேசமான குடம் என்ற சொல்லைமாத்திரங்கொண்டுத் என்ற எழுத்துப் பேறும் ஐ விகுதியும் பெறுவித்துக் குடந்தையென்றார். வில்லிபுத்தூர் என்ற முழுப்பெயரில் புது என்றமாத்திரத்தைக் கொண்டு புதுவை என்பது போலவும், குருகூரைக் குருகையென்றும், அழுந்தூரை அழுந்தையென்றும், நாகூரை நாகையென்றும், தஞ்சாவூரைத் தஞ்சை என்றும், திருச்சேறூரைத் திருசேறையென்றும் பெருங்குளத்தை குளத்தையென்றும் அருளிச் செய்தல் போலவும் குடமூக்கூரைக் குடந்தையென்றாரென்று கொள்ள வேணும். தூப்புல்பிள்ளைதாமும், நவரத்தினமாலையும், மும்மணிக் கோவையிலும், திருவயிந்திரபுத்தை அயிந்தை என்றருளிச்செய்திருப்பதும் நோக்கத்தக்கது.

உரை:2

நறுமணம் நிறைந்த நல்ல துளசியைக் கையால் கண்ணி தொடுத்து
வானின் செழுமை மிகுந்த சோலையிலிருக்கும் கற்பகத் தருவின் பூக்களால் நெருக்கித் தொடுத்த மாலையை  தேன் நிறைந்த மலர் மேல் வைத்துத் திருமகள் அனுப்பி இருக்கிறாள்.  குடந்தையில் படுத்தவாறு இருக்கும் தலைவனே அழாது கண்ணுறங்கு.

English Translation

Goddess Lakshmi seated on a nectared lotus has sent a garland of fresh Tulasi springs, and a wreath of Karpagam flowers picked from bowers rising sky-high. My Liege, don’t cry, Talelo. Lord reclining in Kudandai, Talelo.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்