விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*  சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து* 
    வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி*  மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்* 
    போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா*  உன்- கோயில் நின்று இங்ஙனே போந்தருளி*  கோப்பு உடைய- 
    சீரிய சிங்காசனத்து இருந்து*  யாம் வந்த- காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாரி - மழைகாலத்தில்
மலை முழஞ்சில் - மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து - (பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும் - உறங்காநின்ற
சீரிய சிங்கம் - (வீர்யமாகிற) சீர்மையையுடைய சிங்கமானது

விளக்க உரை

உரை:1

இவ்வாய்ச்சிகள் “சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்” என்று வேறு புகலற்று வந்து விழுந்தோ மென்றதைக் கேட்டருளின கண்ணபிரான், கடுக உணர்ந்தருளி, “பெண்காள்! மிகவும் வருந்தி இவ்வளவும் வந்தீர்களே! உங்களிருப்பிடந் தேடிவந்து உங்களை நோக்குகையன்றோ எனக்குக் கடமை! என் ஸ்வரூபத்தை நீங்கள் நன்கு உணர்வீர்களன்றோ? யாரேனும் பகைவர் கையிலகப்பட்டு வ்யஸநப்பட்டு நம்மிடம் வந்து முறைப்பட்டால், நான் அவர்களின் வருத்த மிகுதியைக் கண்ணுற்று, ஆ! ஆ!! உங்களுக்கு ஒரு வருத்தம் வருதற்கு முன்னமே வந்து உங்களை நோக்க வேண்டிய கடமையையுடைய நான் அங்ஙனம் முந்துற வரப்பெறாதொழியினும் வருத்தம் நேர்ந்தவுடனேயாகிலும் வந்து உதவப்பெறலாமே’ அங்ஙனமும் வந்து உதவப் பெற்றிலேனே’ வருத்தமுற்ற நீங்களே உற்ற வருத்தத்தை என்னிடம் வந்து, முறையிட்டுக் கொள்ளும்படி நான் அந்யபரனா யிருந்தொழிந்தேனே’ என்னுடைய இக்குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேணும்’ என்று அஞ்சி நடுங்கிக் கூறும் முறையையுடைய என் ஸ்வரூப ஸ்வபாவங்கள் உங்களுக்குத் தெரிந்தவையேயன்றோ உங்களை நான் இவ்வளவு வருத்தமுறுத்தியதைப்பற்றிப் பொறைவேண்டுகின்றேன். இனி உங்கள் காரியத்தைக் குறையறத் தலைகட்டித் தருகின்றேன்: உங்களுக்கு நான் செய்யவேண்டுவதென்?” என்ன’ அதனைக்கேட்ட ஆய்ச்சிகள், “பிரானே! எங்களுடைய மநோரதம் இப்படி ரஹஸ்யமாக விண்ணப்பஞ் செய்யக் கூடியதன்று’ பெரிய கோஷ்ட்டியாக எழுந்தருளியிருந்து கேட்டருளவேணும்” என்று ஆஸ்தாரத்திற் புறப்பாடு ஆகவேண்டிய கிராமத்தை விண்ணப்பஞ்செய்யும் பாசுரம் இது.

உரை:2

"மழைக் காலத்தில், பெண் சிங்கத்துடன் உறங்கிகொண்டிருக்கும் ஆண் சிங்கம், தூக்கம் தெளிந்து எழுந்துவந்து, தீக்கதிர்கள் பறக்கும் தன் கண்களை விழித்து, பிடரி மயிர் நாற் பக்கமும் படரும்படி எழுந்து உடம்பை அசைத்து, கம்பீரமாக பேரொலி எழுப்பி குகையிலிருந்து புறப்படுவது போல, நீயும் உன் கோவிலிலிருந்து கிளம்பி, இம்மண்டபத்திற்க்கு எழுந்தருளி, வேலைப்பாடுகள் மிகுந்த அரியணையில் அமர்ந்து, நாங்கள் வந்த காரியங்களை கேட்டறிந்து அருள் செய்வாயாக!"

English Translation

O Dark-Kaya-hued Lord! Pray come out of sleeping chamber and grace us, like a fierce lion that lay sleeping, hidden in the cavernous mountain-den, waking now with fiery eyes, raising its mane and shaking all over, then yawning, stretching its back, and stepping out. Ascend your majestic lion-throne and inquire of us the purpose of our visit, Grace us

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்