விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்கண் மா ஞாலத்து அரசர்*  அபிமான- பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே* 
    சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்*  கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே* 
    செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ*  திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்* 
    அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்*  எங்கள்மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம் கண் மா ஞாலத்து அரசர் - அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து - (தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே - உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல்  - திரள்திரளாக இருப்பது போலே
வந்து - நாங்களும் உன் இருப்பிடத்தேற) விடைகொண்டு

 

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டில், “மாற்றாருனருக்கு வலிதொலைந்து” இத்யாதியால் தாங்கள் போக்கற்று வந்தவாறைக் கூறின விடத்தும், “இன்னமும் இவர்களுடைய அகவாயை அறியக்கடவோம்” என்று கண்ணபிரான் பேசாதே கிடக்க’ அதுகண்ட ஆய்ச்சிகள், “பிரானே! இப்படியோ இன்னும் உன் திருவுள்ளத்தில் ஓடுவது? எமக்கு நீ தான் புகலாகாதொழிந்தாலும் வேறொரு புகலைத்தேடி ஓடாதபடி அநந்யார்ஹைகளாய் வந்து அடிபணியா நின்ற எங்களை நீ கடாக்ஷித்தருளவேணு” மென்று பிரார்த்திக்கும் பாசுரம், இது. தம்மிடத்தில் ஈச்வரத்வ புத்தியையுடைய சில அஹங்காரிகளான அரசர்கள் “இப்பூமிக்கு நாம் கடவோம்” என்று அபிமானித்திருந்த அஹங்காரத்தை அடிப்பற்றோடு அழித்துப்போகட்டு ‘ஸோஹம்’ என்றிருந்த நிலைகுலைந்து ‘தாஸோஹம்’ என்று சேஷத்வத்தை முறையிட்டுக் கொண்டு ஸர்வஸ்வாமியான உன்னுடைய பள்ளிக்கட்டிலின் கீழ் வந்து புகுந்து கூட்டங்கூட்டமாக இருப்பதுபோல, நாங்களும் எங்களுடைய ஸ்த்ரித்வாபிமாநத்தைத் தவிர்த்துக்கொண்டு இங்ஙனே வந்து புகுந்தோம்’ இனி எம்மைக் கடாக்ஷி த்தருளதியேல், இன்றளவும் உன்னைப் பிரிந்திருந்ததற்கு அடியான பாவங்களடங்கலும் ஒழிந்துவிடு மென்கிறார்கள்.

உரை:2

  "பரந்த பூமியை ஆண்ட மன்னர்கள், தமக்கு மேம்பட்டவர்கள் யாரும் இல்லை என்னும் கர்வம் அடக்கப்பட்டு, இங்கு வந்து உன் அரியாசனத்தின் கீழ் சங்கமிருப்பது போல நாங்களும் இங்கு வந்தடைந்தோம். எனவே, கிண்கிணி சதங்கைப்போலே, பாதி மலர்ந்த செந்தாமலரைப் போன்று உன் சிவந்த கண்கள் எங்கள் மேல் விழிக்கலாகாதோ? சந்திர, சூர்யர்களைப்போன்ற அவ்விழிகள் எங்கள் மேல் விழுமாகில் எங்களின் அனைத்து பாபங்களும் கழிந்து விடும்."

English Translation

Like the great kings of the wide world, who came in hordes and stood humbly at your bedstead, we have come to you. May your lotus bud like eyes open slowly on us, forming like the mouth of dancer’s ankle bells? May the gaze of your two eyes fall upon us, like the Sun and the Moon rose together. May the curse on us be lifted?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்