விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப*  மாற்றாதே பால் சொரியும் வள்ளற் பெரும் பசுக்கள்* 
    ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்*  ஊற்றம் உடையாய் பெரியாய்*  உலகினில்- 
    தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்*  மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்* 
    ஆற்றாது வந்து உன் அடிபணியுமா போலே*  போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து ஏலோர் எம்பாவாய்.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏற்ற கலங்கள் - (கரந்த பாலை) ஏற்றுக் கொண்டகலங்களானவை
எதிர் பொங்கி - எதிரே பொங்கி
மீது அளிப்ப - மேலே வழியும்படியாக
மாற்றாத - இடைவிடாமல்
பால் சொரியும் - பாலைச் சுரக்கின்ற

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டில் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பின பின்னர், அவள் உணர்ந்தெழுந்துவந்து “தோழிகாள்! நான் உங்களில் ஒருத்தியன்றோ? உங்கள் காரியத்தைக் குறையறத் தலைக்கட்டுவிக்கிறேன்’ நீங்கள் இறையும் வருந்தவேண்டா’ நாமெல்லாருங்கூடிக் கண்ணபிரானை வேண்டிக்கொள்வோம், வம்மின்” என்ன’ அங்ஙனமே நப்பின்னைப் பிராட்டியுமுட்பட அனைவருமாகக் கூடிக் கண்ணபிரான் வீரத்தைச் சொல்லி ஏத்தி, அவனை உணர்த்தும் பாசுரம் இது. முதலிரண்டரை அடிகளால் நந்தகோபருடைய செல்வத்தைப் புகழ்கின்றனர். கீழ் பதினேழாம் பாட்டிலும் பதினெட்டாம் பாட்டிலும் நந்தகோபருடைய அறநெறித் தலைமையும் தோள்வலி வீரமும் புகழப்பட்டன’ இப்பாட்டில், அவருடைய கறவைச் செல்வத்தின் சீர்மை கூறப்படுகின்றதென்றுணர்க. இவ்வாய்ச்சிகள் பலகாலும் கண்ணபிரானை விளிக்கும்போது “நந்தகோபன் மகனே” என்று விளித்தற்குக் கருத்து யாதெனில்’ பரமபதத்திலிருப்பைத் தவிர்ந்தும் *பனிக்கடலிற் பள்ளிகோளைப் பழகவிட்டும் நீ இத்திருவாய்ப்பாடியில் நந்த கோபர்க்குப் பிள்ளையாய் பிறந்தது இங்ஙன் கிடந்துறங்கவோ? எங்கள் குறையைத் தீர்க்கவன்றோ நீ அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்திற் பிறந்தது’ ஆன பின்பு, பிறந்த காரியத்தை நோக்க வேண்டாவோ? என்றபடி.

உரை:2

"சுரந்த பாலை ஏந்திய குடங்கள் பொங்கி வழிய, இடைவிடாது வள்ளலைப் போன்று பால் சுரக்கும் பசுக்களை அதிக அளவில் படைத்த நந்த கோபனின் மகனே! நீ எழுந்திருப்பாயாக! பக்தர்களை காத்து அருள்பவனே! அனைவராலும் அறியப்பட்டிருக்கும் பெருமை வாய்ந்தவனே! பூமியில் அவதாரம் செய்த ஒளி உருவானவனே! படுக்கையிலிருந்து எழுந்திரு! உன் வலிமையினைக் கண்டு தங்கள் வலிமையை இழந்து, உன் மாளிகை வாசலில் கதியற்று வந்து உன் திருவடிகளில் விழும் பகைவர்களைப்போல உன்னை புகழ்ந்து கொண்டு, துதித்து, உன் திருமாளிகைக்கு வந்துள்ளோம்!"

English Translation

Wake up, O son of the cowherd chief, who bears prized cows that pour milk incessantly into canisters over flowing. Wake up, O strong One, who stands like a beacon to the world. We stand at your DOOR like vassals who accept defeat and come to pay homage to you. We come praising you; Glory is to your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்