விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஓதக் கடலின்*  ஒளிமுத்தின் ஆரமும்* 
    சாதிப் பவளமும்*  சந்தச் சரிவளையும்*
    மா தக்க என்று*  வருணன் விடுதந்தான்* 
    சோதிச் சுடர் முடியாய்! தாலேலோ* 
    சுந்தரத் தோளனே! தாலேலோ

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓதம் - அலையெறிப்பையுடைய
கடலில் - ஸமுத்ரத்தில் (உண்டாய்)
ஒளி - ஒளியையுடைத்தாய்
முத்தின் - முத்துக்களால் கோக்கப்பட்ட
ஆரமும் - ஹாரத்தையும்

விளக்க உரை

உரை:1

வருணைதேவன் கருங்கடற் கடவுளாதலால் அக்கடலில் நின்றுந்தோன்றின முத்துக்களினாலும் பவழங்களினாலும் ஆகிய ஹாரங்களையும் முன்கைச் சரிகளையும் சங்கு வளையல்களையும் அனுப்பினான். அதைச்சொல்லித் தாலாட்டுகிறாள். அரக்கு முதலியவற்றால் செய்யப்பட்ட க்ருத்ரிமப்பவழங்களும் உண்டாதலால் அப்படியல்லாமல் உண்மையான சிறந்த பவளமென்கைக்காகச் சாதிப்பவள மெனப்பட்டது. சோதிச்சுடர் - ஒரு பொருட்பன்மொழிதக்க - வினைமுற்று.

உரை:2

ஓலி எழுப்பும் கடலின் ஒளி பொருந்திய முத்தால் ஆன ஆரமும் உயர் வகைப் பவளமும் வண்ணச் சரிகையும் உனக்குச் சிறப்பானது என்று மழைக் கடவுள் தந்தனுப்பி இருக்கிறான் அழகிய தோள்கள் ஏந்தும் புகழ் வீசும் முடியுடையவனே கண்ணுறங்கு.

English Translation

Varuna has sent a perfectly matching set of bangles and bracelets set with prized corals and a string of lustrous pearls from the deep ocean. O, Radiant-crowned Lord, Talelo. Lord with beautiful arms, Talelo.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்