விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி*  நினைத்து முலை வழியே நின்று பால் சோர* 
    நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்*  பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி* 
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற*  மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்* 
    இனித் தான் எழுந்திராய் ஈது என்ன பேர் உறக்கம்*  அனைத்து இல்லத்தாரும் அறிந்து-ஏலோர் எம்பாவாய்.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இள கன்று எருமை - இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை
கனைத்து - (பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக்கொண்டு
கன்றுக்கு இரங்கி - (தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து - (கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர - முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப்பெருக்கினால்)

விளக்க உரை

உரை:1

நாட்டிலிருந்து போதோடு காட்டிலிருந்த போதோடு வாசியற பெருமாளைப் பின்தொடர்ந்து நோக்கிக்கொண்டு திரியும் இளையபெருமாளைப் போன்று, கண்ணபிரானையன்றி மற்றொருவரையும் அறியாமல் என்று மொக்க அவனையே பினறொடர்ந்து அவன் பக்கலில் மிகவும் பரிவுபூண்டிருப்பா னொருவனுடைய தங்கையாய்ச் சீர்மை பெற்றிருப்பாளொரு ஆய்ப்பெண்ணை உணர்த்தும் பாசுரம், இது. நெடும்போதாக நின்வாசற் கடையை நாங்கள் பற்றிக்கொண்டு, முன் பொலாவிராவணன்றன் முதுமாதிளிலங்கை செற்ற சீரிய சேவகத்தை எடுத்துப் பாடாநின்றாலும் நீ வாய்திறவாதே கிடந்துறங்குகின்றாய்; இங்ஙனும் ஓருறக்கங்கூடுமோ? உன்னைக் காணாதே நாங்கள் அலமந்து தளர்ந்திருக்க மாற்றை நீ அறிந்து வைத்தும் இங்ஙனுறங்குகை உரியதன்று, இனிக்கடுக உணர்ந்து வாராய், என்கிறார்கள். இதில் முதலிரண்டை அடிகளால் இவள் தமையனுடைய செல்வத்தின் சிறப்புக்கூறப்படுகின்றது. அவன் அநவரதம் கண்ணபிரானுடன் கூடித்திரிபவனாதலால் கறவைகளைக் காலந் தவறாது கறக்கப் பெறான்; அக்கறவைகள் வகுத்த கால்திற் கறக்கப் பெறாமையாலே முலைகடுத்து ‘கன்று என்படுகிறதோ!’ என்று வாசலிலே நின்று குமுறி, தூரத்திற் கட்டப்பட்டிரா நின்றுள்ள கன்றின்மீது தனது பாவபந்தத்தைச் செலுத்தி, பாவநாப்ரகர்ஷத்தாலே, கன்று முலையின் வாய்வைத்ததாகக் கொண்டு, கைவழியாகவு மன்றி, கன்றின் வாய்வழியாகவு மன்றி முலை வழியே பால் சொரியா நிற்கும்; அந்தப் பாற்பெருக்கனால் வீடு முழுவதும் வெள்ளமானபடியா தொன்றுண்டு – அதனைச் செல்வமென்றிட்டு, இங்ஙனொத்த செல்வமுடையானுக்குத் தங்கையாகப் பிறந்தவளே! என்று அவளை விளிக்கின்றனர்.

உரை:2

கன்றுடன் கூடிய இளைய எருமை கனைத்து, தன் கன்றை நினைத்துக் கொண்டு அதற்குப் பசிக்குமே என்று இரங்கி அந்த நினைவினாலேயே பால் மடியிலிருந்து தானே விழ, அந்தப் பாலால் நனைந்தௌ வீடெல்லாம் சேறு ஆகும். அந்த வீட்டை உடைய நற்செல்வனின் தங்கையே! தலையின் மேல் பனி விழ உன் வாசல் கதவைப் பற்றிக் கொண்டு, தென்னிலங்கைக்கு அரசனான இராவணனைச் சினம் கொண்டு தோற்கடித்த, நம் மனத்துக்கு இனியவனான இராமனை நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம். அதனைக் கேட்டும் நீ வாயைத் திறக்கவில்லை! இனி மேலாவாது எழுந்திருப்பாய்! இது என்ன இவ்வளவு நீண்ட தூக்கம்?! எல்லா வீட்டுக்காரர்களும் உறக்கம் விட்டு எழுந்துவிட்டார்கள்!

English Translation

O sister of a fortune favoured cowherd who owns cows with boundless compassion, that pour milk from their udders, at the very thought of their calves, slushing the cowshed! We stand at your doorstep with dew dropping on our heads. Come open your mouth and sing the praise of the Lord dear to our heart, who in anger slew the demon-king of Lanka. At least now, wake up, why this heavy sleep? People in the neighborhood know about you now!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்