விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து*  செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்* 
    குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே*  புற்றரவு-அல்குற் புனமயிலே போதராய்* 
    சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து*  நின்- முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்* 
    சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி*  நீ- எற்றுக்கு உறங்கும் பொருள்?-ஏலோர் எம்பாவாய்.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கன்று கறவை - கன்றாகிய பசுக்களின்னுடைய
பல கணங்கள் - பல திரள்களை
கறந்து - கறப்பவர்களும்
செற்றார் - சத்துருக்களினுடைய
திறல் அழிய - வலி அழியும்படி

விளக்க உரை

உரை:1

கண்ணபிரான் ஊர்காகா ஒரு பிள்ளையாய் அனைவராலுங் கொண்டாடப்பட்டு வளர்ந்தருளுமாறுபோல, ஊர்க்காக ஒரு பெண்பிள்ளையாயிருப்பாளாய், கணவனோடு கலவி செய்கைக்குப் பாங்கான பருவமுடையளாய், அவனைப் பெறுதற்கு நானோ நோற்பேன்? வேணுமாகில் அவன்றானே நோற்று வருகிறான் என்று கிடக்கிறாளொருத்தியை உணர்த்தும் பாசுரம், இது. உனது உறவுமுறையார் தோழிமார் என்ற வர்க்கங்களில் ஒருவர் தப்பாமல் அனைவருந் திரண்டுவந்து எம்பெருமான் திருநாமங்களைப் பாடாநிற்க, நீ உம்பிலும் அசைவின்றி வாயிலும் அசைவின்றி இங்ஙனே கிடந்துறங்குவது என்ன பயனைக் கருதியோ என்கின்றனர். முதலிரண்டடிகள் கோவலர்க்கு அடைமொழி. ராஜகுமாரன் முலைசரிந்த பெண்டிரைப் பாராதவாறுபோலக் கண்ணபிரான் கன்றுகளை யன்றிப் பசுக்களைப் பெரும்பான்மையாகக் காணக்கடவனல்லனாதலால், இவன் தனது கரஸ்பர்சத்தினாற் பசுக்களையுங் கன்றாக்கி யருள்வனென்க. கணங்கள் பல என்றமையால் கறவைகள் தனித்தனியே எண்ணமுடியாமையெ யன்றியே அவற்றின் திரள்களும் எண்ணமுடியா வென்பது தோற்றும்.

உரை:2

கன்றுடன் கூடிய பசுக்கூட்டங்கள் பல வளர்த்து, எதிரிகளின் பெருமை அழியும்படி சென்று போர் செய்யும், குற்றம் ஒன்றும் இல்லாத கோபாலர்களின் பொற்கொடி போன்றவளே! புற்றில் வாழும் பாம்பின் படமெடுத்த தலையைப் போன்று தோன்றும் அழகிய இடையின் கீழ்ப்பகுதியை உடையவளே! பூந்தோட்டத்தில் வசிக்கும் மயிலைப் போன்றவளே1 எழுந்து வருவாய்! அக்கம் பக்கம் சுற்றிலும் வாழும் தோழியர்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு முற்றத்தில் புகுந்து நின்று மேக நிறம் கொண்டவனின் திருப்பெயர்களைப் பாடிக் கேட்டும், கொஞ்சமும் அசையாமலும் ஒரு சொல்லும் சொல்லாமலும் செல்வப் பெண்ணே நீ உறங்குகின்றாயே?! இதற்கு என்ன பொருளோ? 

English Translation

O Golden bower of the faultless Kovalar folk who milk many herds of cows, and battle victoriously in wars. O snake, slim waisted peacock damsel! Come join us. The neighborhood’s playmates have all gathered in your portico to sing the names of the cloud-hued Lord. You lie, not moving, not speaking. O wealth favoured girl, what sense does this make? Come quickly!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்